Rakul Preet Singh: தலைக்கனமான பெண்.. இந்தியன் 2 படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Rakul Preet Singh: இந்தியன் 2 படத்தில் நடித்தது தனது கேரியரில் மிகவும் ஸ்பெஷலான படம் என ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

Rakul Preet Singh: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, நடிகர் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் பணிபுரிவது ஒரு வளமான அனுபவமாக மாறி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். படத்தின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கும் போது, அதன் தொடர்ச்சியில் உள்ள பாத்திரத்துடன் தனிப்பட்ட மட்டத்தில் இணைவதாகக் கூறுகிறார்.
இந்தியன் 2 பற்றி அவர் என்ன சொன்னார்
இந்தியன் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங், "இது நிச்சயமாக எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த படங்களில் ஒன்றாகும். என்னுடன் பணிபுரியும் மக்களுக்காக மட்டுமல்ல, எனது கேரக்டருக்காகவும் தான்.
நான் ஒரு தலைக்கனமான, நம்பிக்கையான பெண்ணாக நடித்து இருக்கிறேன். எங்கேயோ, என் நிஜ வாழ்க்கையில் இந்த கதாபாத்திரத்துடன் நான் முழுமையாக எதிரொலிக்கிறேன். ஷங்கர் சாருடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட நுணுக்கங்களிலிருந்து இந்த கதாபாத்திரம் பற்றி தெரிந்து கொண்டேன் “ என்றார்ஃப்.
இந்தியன்
இந்தியன் படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவது பகுதி ஜீரோ சகிப்புத்தன்மை என்ற டேக்லைனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் சேனாபதி கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்து உள்ளார். இதில் காஜல் அகர்வால், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு படக்குழுவினர் உயிரிழந்தார். இதனையடுத்து படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பும் தாமதமானது. 2022 ஆம் ஆண்டில் தயாரிப்பு மீண்டும் தொடங்கியது, இதற்கும் கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் படத்திற்கும் இடையில் ஷங்கர் படப்பிடிப்பை நடத்தினார்.
முதல் பாகம் பற்றி
முதல் பாகத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோண்ட்கர், கஸ்தூரி சங்கர் ஆகியோர் நடித்து இருந்தனர். சேனாபதி, நேர்மையான தந்தை, ஊழல் செய்யும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்தார். ஊழல் அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்கவும், அவர்கள் லஞ்சம் வாங்காமல் இருப்பதை உறுதி செய்யவும் விழிப்புடன் இருக்கும் ஒரு முன்னாள் ராணுவ வீரரின் கதையை இந்த படம் சொல்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் மாபெரும் வெற்றி பெற்றது.
ரகுல் ப்ரீத் சிங்கின் அடுத்த படம்
இந்தியன் 2 தவிர ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பிஸியான ஷெட்யூல் காத்திருக்கிறது. அவர் தற்போது டி தே பியார் தே 2 படப்பிடிப்பில் உள்ளார், விரைவில் அர்ஜுன் கபூர் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் மேரே ஹஸ்பண்ட் கி பீவி படத்தில் காணப்படுவார். மேலும், அவர் அமீரி படத்தில் நீனா குப்தா, சங்கி பாண்டே மற்றும் சிமோன் சிங் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்