Rakul Preet Singh: இவ்வளவு தேவையா? இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rakul Preet Singh: இவ்வளவு தேவையா? இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் என்ன?

Rakul Preet Singh: இவ்வளவு தேவையா? இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Published Jul 14, 2024 06:53 PM IST

Rakul Preet Singh: இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் என்ன?
இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் என்ன? (Instagram/@rakulpreet)

ரகுல் ப்ரீத் சிங் சம்பளம்

இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைவான நேரத்தில் வரும் ரகுல் படத்தில் நடிக்க ரூ.2 கோடி வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 வசூல்

இந்தியாவில் ‘இந்தியன் 2’ எவ்வளவு வசூல்? Sacnilk.com வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான அன்றைய தினம் அந்தப்படம், தமிழில் 16.5 கோடி ரூபாயும், இந்தியில் 1.2 கோடி ரூபாயும்,தெலுங்கில் 7.9 கோடியும் வசூல் செய்திருக்கிறது.

இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கி கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும், இந்தியன் தாத்தா கொல்வதை மைய கருவாக வைத்து கதை சொல்லி இருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்திலும், அதுதான் மையக்கரு.

சோசியல் மீடியா வழியாக அழைப்பு

ஒரே வித்தியாசம், தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சினைகளை கருவாக எடுத்து காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். அவ்வளவு தான். அந்த பிரச்சினை சம்பந்தமான காட்சிகளை சித்தார்த்தையும், அவர் நடத்தி வரும் யூ- டியூப் சேனல் மூலமாகவும் நகர்த்தி இருக்கும் ஷங்கர், அதன் மூலமாக, பல்லாண்டுகளுக்கு முன்னதாக தாய்பேய்க்கு சென்ற இந்தியன் தாத்தாவிற்கு, சோசியல் மீடியா வழியாக அழைப்பு விடுகிறார்.

இதனையடுத்து இந்தியா வரும் இந்தியன் தாத்தா என்ன செய்தார்? இந்த முறை லஞ்சத்தை ஒழிக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் என்ன?... லஞ்சத்தை ஒழிக்க அவர் கூற வரும் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை.

ஷங்கரின் அதிரடி முடிவு

இந்தியன் 2 படத்தில் உள்ள சில காட்சிகள் வெட்டப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சில நீண்ட காட்சிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் சுமார் 20 நிமிட இயக்க நேரம் குறைக்கப்படும். முதலில் இந்தியன் 2 படம் சுமார் 3 மணி நேர இயக்க நேரத்துடன் வந்தது.

இப்போது டிரிம் செய்யப்பட்டவுடன் 2 மணி 40 நிமிடமாக குறைக்கப்படும். அனைத்து மொழி பதிப்புகளுக்கும் இயக்க நேரம் குறைக்கப்படும்.

இந்தியன் 2 ஒரு நீண்ட இடைவெளி கொண்ட படம், சில காட்சிகள் மிக நீளமாகவும் சலிப்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் சிலர் உணர்ந்தனர். இதனால் படத்தின் நிளத்தை குறைக்க படக்குழு முடிவு செய்து இருப்பது நல்ல முடிவு என சொல்லப்படுகிறது.

படக்குழு

சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியங்கா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9