‘பிறக்கும் போதே யாரும் இப்படி.. முகப்பரு வந்தா எனக்கு வருத்தம் வரத்தான்.. அந்த நோயால அவ்வளவு வேதனை’ -ரகுல் ப்ரீத் சிங்!
அண்மையில் இரு பெண்களை சந்தித்தேன். அவர்கள் தங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது; அதற்காக நாங்கள் 5 கிலோ எடையிழக்க வேண்டும் என்று கூறினர். - ரகுல் ப்ரீத் சிங்!
லண்டனில் புத்தாண்டு விடுமுறையை முடித்துவிட்டு திரும்பிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், உணவு குற்ற உணர்வு குறித்து கேப்ஷன் கொடுத்து, தனது புகைப்படத்தை வெளியிட்டார். நடிகர்களாக இருக்கும் பட்சத்தில், உங்களது உடல் தோற்றம் தொழில்துறையில் உங்கள் இடத்தை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. அப்படி இருப்பதால், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அதிக கண்காணிப்புடன் இருக்க வேண்டும்; இதனால், பல நேரங்களில், அவர்கள் ஒரு வகையான உணவு மனஅழுத்த நோயில் சிக்கிக்கொள்கிறார்கள். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுவே முதல் முறை
இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங்கிடம் கேட்டபோது, "நான் சில காலமாகவே இதைப் பற்றி பேச வேண்டும் நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் நான் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து இருக்கிறேன். ஃபிட்டாக இருப்பது எப்போதுமே எனக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.
ஆனால், இது தொல்லையாக மாறுவதற்கு ஒரு சின்ன கோடுதான் இருக்கிறது. இது என்னுடைய கடந்த காலத்தில் நடந்தது. அந்த சமயத்தில் நான் எனக்கு நானே சொல்லிக்கொண்டது என்னவென்றால், பரவாயில்லை, நீ ஒவ்வொரு நாளும் உங்களை எடைபோட வேண்டியதில்லை என்பது.. " என்றார்.
பசியின்மை கொண்டவர்களாக
தொடர்ந்து பேசிய அவர், ‘பல இளம் பெண்கள் இந்த குற்ற உணர்வின் காரணமாக, பசியின்மை கொண்டவர்களாக இருப்பது தொடர்பான அறிக்கைகளை நான் படித்தேன். இதன் மூலம் நாம் உணவு சார்ந்த குற்ற உணர்வில் இருக்கிறோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
மக்கள் கொண்டிருக்கும் உணவு மனச்சோர்வு பற்றி யாரும் பேசாததால் அது குறித்து நாம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். பல இளம் பெண்கள் பெண் நடிகர்களின் உடலமைப்பைப் பார்த்து, தங்களை எடைப்போட்டு கொள்கிறார்கள்.
பிறக்கும் போதே யாரும்
இளம் பெண்கள் அனைவரும் நடிகைகளின் தோல் மற்றும் உடலைப் பார்க்கும்போது வாவ் என்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தெரிவதில்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய வேலை நடக்கிறது; பிறக்கும் போதே யாரும் அப்படி பிறப்பதில்லை. ஷூட்டிங்கிற்கு கிளம்புவதற்கு முன்னதாக எங்களுக்கு இருக்கும் பருக்களை நினைத்து நாங்களும் மனச்சோர்வு கொள்வோம்; நாங்களும் மனிதர்கள்தானே!
நான் அண்மையில் இரு பெண்களை சந்தித்தேன். அவர்கள் தங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது; அதற்காக நாங்கள் 5 கிலோ எடையிழக்க வேண்டும் என்று கூறினர். அப்படியானால், அவர்களின் முன்னுரிமை எடை இழப்பா அல்லது வாழ்க்கையா? இதைப்பற்றி பேசுவதற்கு நான் பெரிய ஜாம்பவான் கிடையாது; ஆனால் உணவு நிபுணர்கள் இது குறித்து பேச முன் வரவேண்டும்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்