ஒர்க் அவுட்டின்போது காயம்..வெயிட் லிப்டில் வந்த விணை! பஞ்சர் ஆகி போன முதுகு - அப்டேட் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்
ஒர்க் அவுட்டின்போது காயம் ஏற்பட்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது விடியோ மூலம் தனது உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங், தனக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதையும் விளக்கியுள்ளார்.
பாலிவுட், தென்னிந்திய சினிமாக்கிளில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கடந்த பிப்ரவரி மாதம் தனது காதலரான ஜாக்கி பக்னானி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பிட்னஸ் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.
ரகுல் ப்ரீத் சிங் ஒர்க்அவுட்டின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போது படுக்கையில் ஓய்வில் இருந்து வருகிறார்.
பெல்ட் அணியாமல் 80 கிலோ டெட்லிஃப்ட் செய்ததாக நடிகையின் குழுவினர் முன்பு தெரிவித்திருந்தனர். இதன் விளைவாக அவரது முதுகில் பிடிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது காயம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
முதுகு பிடிப்பு குறித்து ரகுல்
ரகுல் பகிர்ந்திருக்கும் விடியோவில் அவர் படுக்கையில் படுத்தவாறு இருக்கிறார். அதில், “வணக்கம், என் அன்பான ரசிகர்களே. இதோ எனது உடல்நலம் குறித்து ஒரு சிறிய ஹெல்த் அப்டேட்.
நான் மிகவும் முட்டாள்தனமான ஒன்றைச் செய்தேன். அப்போது என் உடல் சொல்வதை கேட்கவில்லை. இதன் விளைவாக எனக்கு பிடிப்பு ஏற்பட்டது. அது ஒரு பெரிய காயமாக மாறியது.
கடந்த ஆறு நாள்களாக நான் படுக்கையில் இருக்கிறேன். நான் முழுமையாக குணமடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனாலும் அதை விட வேகமாக குணமடைவேன் என்று நம்புகிறேன்.
இதன் மூலம் உங்கள் உடல் உங்களுக்கு வெளிப்படுத்தும் சிக்னல்களை கேளுங்கள் என்பது கற்றுக்கொண்ட பாடம். அதை விட்டு தள்ள முயற்சிக்க வேண்டாம்.
என் உடலை விட என் மனம் வலிமையானது என்று நினைத்தேன். எப்போதும் அப்படி நிகழாது. உங்கள் எல்லா வாழ்த்துக்களுக்கும், குறிப்பாக என்னை மிஸ் செய்யும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. நான் வலுவாக மீண்டு வருவேன்." என பேசியுள்ளார்.
காயத்துக்கு மத்தியிலும் ஷுட்டிங்
முன்னதாக ரகுலின் காயம் குறித்து அவரது குழுவினர் கூறியபோது, “கடந்த சில நாள்கள் நடிகை ரகுல் ஓய்வில் இருக்கிறார், அவரது நிலைமை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி காலையில் ரகுல் தனது உடற்பயிற்சியை மேற்கொண்டார். அவர் பெல்ட் அணியாமல் 80 கிலோ எடையை லிப்ட் செய்யும் முயற்சியை மேற்கொண்டார், இதன் விளைவாக முதுகில் பிடிப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து 2 நாள்கள் தனது கமிட்மெண்டை நிறைவேற்றும் விதமாக தசை தளர்வு மருந்தை எடுத்துக்கொண்டு De De Pyaar De 2 படப்பிடிப்பை பங்கேற்றார்.
மூன்று நாள்கள் வலியைத் தாங்கிய பிறகு, அவர் பிசியோவைச் சந்தித்தார். என்னதான் மருந்து எடுத்துக்கொண்டாலும் வலி 3-4 மணிநேரத்துக்கு பிறகு, காயமானது அவளது உடலில் மறுபடியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவருடைய L4,L5, S1 நரம்புகளில் நெரிசல் ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைந்து வியர்வை வெளியேறியது. அவள் படுக்கையில் தூங்கச் செய்யப்பட்டாள். பின்னர் தசை தளர்த்திகள் மற்றும் ஊசிகள் கொடுக்கப்பட்ட நிகழ்வாக அவரது பிறந்தநாள் கழிந்தது. சுமார் 5 நாள்களுக்கு பிறகு மெதுவாகவும், நிலையாகவும் குணமடைந்து வருகிறார்." என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரகுல் புதிய படங்கள்
ரகுல் ப்ரீத் சிங் தற்போது De De Pyaar De 2 படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். அத்துடன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கும் இந்தியன் 3 படத்திலும் இவர் முக்கிய கதாபாத்தரத்தில் நடித்துள்ளார்.