தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rakul Preet Singh And Jackky Bhagnani Wedding Invitation Confirms A Beachside Ceremony

Rakul Preet Singh: கோவா கடற்கரையில் ரகுல் ப்ரீத் சிங் திருமணம்! வைரலாகும் திருமண அழைப்பிதழ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 12, 2024 05:56 PM IST

பாலிவுட் ஸ்டார் தம்பதிகளான ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி தங்களது நெருக்கமானவர்களுக்கு கொடுத்திருக்கும் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் திருமண அழைப்பிதழ்
வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் திருமண அழைப்பிதழ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இவர்களின் திருமணத்துக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமண அழைப்பிதழை நெருக்கமானவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த திருமண அழைப்பிதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ரகுல் ப்ரீத் சிங் திருமணம் கோவாவில் கடற்கரை அருகே நடைபெறுவதாக திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இந்த ஸ்டார் தம்பதியினர் மத்திய கிழக்கு நாடுகளில் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டிருந்தார்களாம். இதையடுத்து புதிதாக திருமணம் செய்து கொள்ளும் விரும்பும் தம்பதியினர் இந்தியாவில் வைத்து தங்களது திருமணத்தை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி பேசியதை கருத்தில் கொண்டு தங்களது திருமணம் இடத்தை மாற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரிலேயே இந்த ஜோடி தங்களது திருமண தேதியை மாற்றியமைத்தனர். சில செண்டிமென்ட் காரணமாக ரகுல் - பக்னானி ஜோடி தங்களது திருமணத்தை கோவாவில் நடத்த முடிவு செய்துள்ளனராம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.