Rakul Preet Singh: தீரன் பட நாயகி ரகுல் ப்ரீத் சிங்குக்கு இனிதே முடிந்த கல்யாணம்!
ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானிக்கு, இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின்மூலம் தமிழில் அறிமுகம் ஆகி, முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு, இனிதே திருமணம் நடைபெற்றது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி ஆகிய இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இந்த ஜோடி, கோவாவில் நடைபெற்ற ஒரு பாரம்பரிய ஆனந்த் கராஜ் விழா பாணியில் வைத்து ஒரு திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர், சிந்தி மரபுப்படி, இன்னொரு முறை திருமணச் சடங்கு நடைபெற்றது.
தெற்கு கோவாவில் இருக்கும் ஐ.டி.சி கிராண்ட் ஹோட்டலில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த திருமண நிகழ்வில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் ஷில்பா ஷெட்டி, ஆயுஷ்மான் குரானா, அர்ஜுன் கபூர், டேவிட் தவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டு திருமண விழாக்கள்:
முன்னதாக, இந்த ஜோடிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் இந்தியா டுடேவிடம் கூறியதாவது, "ரகுல் ப்ரீத் சிங்கின் 'சுத்தா' விழா(திருமணச் சடங்கு) காலையில் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த ஜோடி ஐ.டி.சி கிராண்ட் சவுத் கோவாவில் பிற்பகலில் போட்டோஷூட் மற்றும் உணவு எடுத்தல் நிகழும். ரகுல் மற்றும் ஜாக்கி ஆகியோருக்கு இரண்டு திருமண விழாக்கள் இருக்கும். ஆனந்த் கராஜ் மற்றும் சிந்தி பாணி விழா. இது அவர்களின் இரு கலாசாரங்களையும் பிரதிபலிக்கிறது. தங்கள் திருமண பயணத்திற்கு ஒரு பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான தொடக்கத்திற்கான தம்பதியரின் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.
புதுமணத் தம்பதிகளின் அடுத்த வேலை என்ன?
இரண்டு விழாக்களும் முடிந்த பிறகு மாலையில் அவர்கள் தங்கள் முதல் அதிகாரப்பூர்வ திருமணப் படங்கள் மற்றும் திருமண வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த ஊடகங்கள் முன்பு தோன்றி, புகைப்படத்துக்கு காட்சியளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இவர்களது திருமண விழா கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கியது. ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி ஆகியோர் அக்டோபர் 2021ஆம் ஆண்டு முதல் தாங்கள் காதலிப்பதை வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
முன்னதாக, ரகுல் ப்ரீத் சிங் கமல்ஹாசனுடன் சேர்ந்து, இந்தியன் 2-ல் நடிக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியன் முதல் பாகம் 1996-ல் வெளியிடப்பட்டது. ஊழலுக்கு எதிரான போரை நடத்த முடிவு செய்யும் வயதான சுதந்திர போராட்ட வீரர் வேடத்தில் கமல்ஹாசன் அதில் நடித்திருந்தார்.
மறுபுறம், ஜாக்கி தனது அடுத்த தயாரிப்பான ’படே மியான் சோட்டே மியான்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷய், டைகர், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் 2024 பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் இப்படம் வெளிவர உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்