Rajkiran Zeenat Priya: குடிபோதையில் கொடூர அடிகள்; பணம் வாங்கி வரச்சொல்லி படுத்திய பாடு; கதறும் ராஜ்கிரண் மகள்!
அவரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்தான் அண்மையில் வீடியோ வெளியிட்டேன். உண்மையில் கல்யாணத்திற்கு பிறகு, எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஒன்று வந்தது.

பிரியா பேட்டி!
ராஜ்கிரண் மகள் தன்னுடைய கணவரான முனீஸ்ராஜாவை விட்டு பிரிந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து அவர் அண்மையில் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டு, என்னுடைய அப்பாவை எந்த அளவு வருத்தப்படச் செய்தேன் என்பது தமிழ்நாட்டிற்கே தெரியும்.
அவரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்தான் அண்மையில் வீடியோ வெளியிட்டேன். உண்மையில் கல்யாணத்திற்கு பிறகு, எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஒன்று வந்தது. அந்த பிரச்சினையின் போது ராஜ்கிரண் அப்பா, மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எனக்கு உடன் நின்று உதவி செய்தார்.