Rajisha Vijayan: கேமராமேனுடன் காதலில் விழுந்த தனுஷ் பட ஹீரோயின்! ஜோடி புகைப்படம் பகிர்வு
இந்த ஆண்டில் புதிதாக எந்த படமும் நடித்திராத ரஜிஷா விஜயன், தனது காதலரை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் தனுஷ் ஜோடியாக கர்ணன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து ஜெய்பீம், கார்த்தியுடன் இணைந்த் சர்தார் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
ரஜிஷா விஜயன், மலையாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து வரும் டொபின் தாமஸ் ஆகியோர் காதலித்து வருகிறார்கள். இதனை ஒளிப்பதிவாளர் டொபின் தாமஸ் தனது இன்ஸ்டாவில் ரஜிஷா விஜயனை டேக் செய்து உறுதிபடுத்தியுள்ளார்.
இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து, "1461 நாள்கள். சூரியனை சுற்றி மற்றொரு பயணத்தை எண்ணி கொண்டிருக்கிறோம்.
இங்கே அதிக அன்பு, சிரிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் விசித்திரமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்" என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும்போதே தனது காதலர் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
சூர்யா டிவியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் ரஜிஷா விஜயன். தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர், அனுராக கரிக்கின் வெல்லம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்துக்காக சிறந்த நடிகை கேரளா மாநில அரசின் விருதுகள், ஆசியநெட் பிலிம் விருதுகள் வென்றார்.
கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் நான்கு படங்கள் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த ஆண்டில் பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார். ஒளிப்பதிவாளர் டொபின் தாமஸ் மலையாளத்தில் ஸ்டாண்ட் அப், வீரம், ஏடன், கோ கோ, தி பால்ஸ் ஐ, லவ்புல்லி யுவர்ஸ் வேதா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில், ஸ்டாண்ட் அப், கோ கோ, லல்புல்லி யுவர்ஸ் வேதா படங்களில் டொபின் தாமஸ், ரஜிஷா விஜயன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
2024 தொடக்கத்தில் பாலிவுட், தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் முன்னணி ஹீரோயினான ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வருவதை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்த கடந்த வாரத்தில் மாடலும், நடிகையுமான எமி ஜாக்சனும் தனது காதலரை உறுதிபடுத்தினார்.
இந்த வரிசையில் தற்போது ரஜிஷா விஜயனும் இணைந்துள்ளார். விரைவில் அவர் திருமணம் செய்து கொள்வார் எனவும் மல்லுவுட் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்