தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Guru Sisyan: ரஜினியின் அதிரடி ஆக்ஷன் கலந்த ஹியூமர் ஹிட் படம் குரு சிஷ்யன்.. கௌதமியின் முதல் படம்!

Guru Sisyan: ரஜினியின் அதிரடி ஆக்ஷன் கலந்த ஹியூமர் ஹிட் படம் குரு சிஷ்யன்.. கௌதமியின் முதல் படம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 13, 2024 05:05 AM IST

Guru Sisyan: பொதுவாக ரஜினியின் ரசிகர்கள் அவரின் தனித்துவமான ஸ்டைலுக்காகவும் ஆக்சனுக்காகவும் பஞ்ச் டயலாக்குகளுக்காக காத்து கிடப்பார்கள். அவர் படங்களில் ஹியூமர் சேர்க்கப்பட்ட காலத்தில் இந்த படத்தில் சற்று தூக்கலாக காமெடி போர்சனை உற்சாகம் பொங்கும் பேக்கேஜாக சேர்த்து இயக்கியிருந்தார் எஸ்.பி.முத்துராமன்.

ஹியூமர் ஹிட் படம் குரு சிஷ்யன்.. கௌதமியின் முதல் படம்!
ஹியூமர் ஹிட் படம் குரு சிஷ்யன்.. கௌதமியின் முதல் படம்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆம்.. அதிரடி நகைச்சுவை திரைப்படமாக அமைந்தது. இன்சாப் கி புகார் என்ற இந்திபடத்தின் ரீமேக் தான் இது. கௌதமியின் அறிமுக படம். அதேபோல் ரஜினி பிரபு காம்பினேஷனில் இதுதான் முதல் படம். பஞ்சு அருணாசலம் தமிழுக்காக திரைக்கதை வசனம் எழுதி மீனா அருணாசலம் தயாரித்தார்

ரஜினி ராஜாவாகவும் பிரபு பாபுவாகவும் பாண்டியன் மனோகராகவும் சீதா சித்திராவாகவும், கவுதமி கீதாவாகவும் தோன்றினர். உடன் ராதாரவி சோ ரவிச்சந்திரன் செந்தாமரை நரசிம்மர் மனோரமா வினுசக்ரவர்த்தி நட்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான படம் குரு சிஷ்யன்.

சிறையில் விடுதலைக்காக காத்திருக்கும் குற்றவாளிகள் ராஜா மற்றும் பாபு. இருவரும் சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ள மனோகரை சந்திக்கின்றனர். மனோகர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த கதையை சொல்கிறார். ஒரு நிகழ்ச்சி மூலம் மனோகரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. 

விடுதலையான ராஜா பாபு இருவரும் லஞ்சம் வாங்கும் காவல் துறை அதிகாரி நல்ல சிவம் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் போல ரெய்டு செய்து நிறைய பணம் நகைகளை கைப்பற்றி அவரின் மனைவி கல்யாணியை மிரட்டி எழுதி வாங்கி விடுகிறார்கள். நல்ல சிவத்தின் மகள் கீதாவை ராஜாவும், ராஜமாணிக்கம் மகள் சித்ராவை பாபுவும் காதலிக்கின்றனர். இந்த காதலையும் அவர்கள் இருவரும் தங்கள் திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்வது சுவாரஸ்யம். இருபது ஆண்டுகளுக்கு ம் முன்பு நடந்த ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கும் மனோகர் தந்தை கந்தசாமியிடமிருந்து கண்டு பிடிக்க ராஜமாணிக்கம் முயல்கிறார். 

அந்த செய்தியை கந்தசாமி அறிந்தாலும் ராஜமாணிக்கத்திடம் மறைக்கிறார். பத்மா மூலம் பல ஆண்டுகள் முன்பு பள்ளி பயணத்தில் தொலைந்து போன கந்தசாமி மகன் என்று ராஜா கண்டு பிடிக்கிறார். பல்வேறு வகையான குழப்பங்களுக்கு காரணமாக இருக்கும் குகையை கண்டறிந்து தங்க நகைகளை பார்க்கிறார்கள். தொடர்ந்து ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கப்பட்டு முத்துராஜ் நல்ல சிவம் கைதாகி சிறைக்கு செல்ல மனோகர் விடுதலையாகி வெளியே வருவார். அனைத்து காட்சிகளும் நகைச்சுவை உணர்வு கலந்து எடுக்கப்பட்டிருக்கும்.

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. அவர் ஜிங்கிடி ஜிங்கிடி என்ற பாடலும் எழுதியுள்ளார். மற்ற பாடல்கள் வாலியால் எழுதப்பட்டது.

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்

வா.. வா.. வஞ்சி

நாக்காலிக்கு சண்டை

உத்தம புத்திரி நானு

ஜிங்கிடி.. ஜிங்கிடி.. என்று அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. எப்போதும் போல் எஸ்.பி. முத்துராமன் மிகவும் திட்டமிடலோடு ஒரு மாதத்தில் படப்பிடிப்பு நடத்தி முடித்தாராம். ஆனால் படம் என்னவோ ரசிகர்கள் ஆதரவால் பல திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்