தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth's Lal Salaam Release Date Announced

Lal Salaam: பொங்கல் ரேஸில் பின்வாங்கிய 'லால் சலாம்'..எப்போது ரிலீஸ் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jan 09, 2024 05:53 PM IST

Lal Salaam Release Date: 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளாா்.

லால் சலாம்
லால் சலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்து இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'லால் சலாம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 9ஆம் தேதி 'லால் சலாம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி போஸ்டரை ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளாா். பொங்கல் விடுமுறைக்கு லால் சலாம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படத்தின் டீஸரில், விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக மாறுகிறது. இதனால் பெரும் கலவரம் வெடிக்கிறது. இதனால் சில மரணச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி. 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க', 'குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க' என்று ரஜினி பேசும் அனல் பறக்கும் வசனங்கள் சரவெடியாக வெடிக்கிறது. டீஸரில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா்.

 

முன்னதாக, 'லால் சலாம்' படப்பிடிப்பு சென்னை, மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து ரஜினி தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தாா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.