தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth's Lal Salaam Got Secures A U/a Certificate

Lal Salaam Update: ரஜினி படத்திற்கு கிடைத்த யூ/ஏ சான்றிதழ்..புதிய அப்டேட் இதோ..!

Karthikeyan S HT Tamil
Feb 06, 2024 08:43 PM IST

லால் சலாம் படத்தின் சென்சார் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 'லால் சலாம்'
'லால் சலாம்'

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

ட்ரைலரில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் காட்சிகள் காட்டப்படுகின்றன. கூட்டம் சேர்க்குறவன விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன் வசனத்துக்குப் பிறகான மொய்தீன் பாயாக ரஜினியின் என்ட்ரி மாஸூக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

உள்ளூரில் நடைபெற்று வரும் கதை ஒரு கட்டத்தில் பம்பாயை நோக்கி நகர்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் ரஜினி பேசும், ‘மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடையாளம்’ வசனமும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செந்திலின் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை காட்சிகள் உறுதி செய்வது போல் அமைந்துள்ளது.

ட்ரெய்லர் வீடியோ:

இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் 9 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் சென்சாரும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்தின் சென்சாரும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏ..புள்ள பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. ரஹ்மான் இசையில் கபிலன் எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருந்தார்.

முன்னதாக வெளியான டீஸரில், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தலைமையிலான இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக மாறுகிறது. இதனால் பெரும் கலவரம் வெடிக்கிறது. இதனால் சில மரணச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி. 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க', 'குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க' என்று ரஜினி பேசும் அனல் பறக்கும் வசனங்கள் சரவெடியாக வெடிக்கிறது. டீஸரில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ போன்ற படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.