6 Years of Kaala: கியாரே செட்டிங்கா? "இது காலா கில்லா".. ரஜினியின் ‘காலா’ ரிலீஸாகி 6 ஆண்டுகள் நிறைவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  6 Years Of Kaala: கியாரே செட்டிங்கா? "இது காலா கில்லா".. ரஜினியின் ‘காலா’ ரிலீஸாகி 6 ஆண்டுகள் நிறைவு!

6 Years of Kaala: கியாரே செட்டிங்கா? "இது காலா கில்லா".. ரஜினியின் ‘காலா’ ரிலீஸாகி 6 ஆண்டுகள் நிறைவு!

Karthikeyan S HT Tamil
Jun 07, 2024 07:47 PM IST

6 Years of Kaala: காலா திரைப்படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தாராவியின் நில அரசியலைக் கண்முன் நிகழ்த்தி காட்டிய படத்தை பற்றிய சுவராஸ்ய தகவல்கள் இதோ..!

6 Years of Kaala: கியாரே செட்டிங்கா? "இது காலா கில்லா".. ரஜினியின் ‘காலா’ ரிலீஸாகி 6 ஆண்டுகள் நிறைவு!
6 Years of Kaala: கியாரே செட்டிங்கா? "இது காலா கில்லா".. ரஜினியின் ‘காலா’ ரிலீஸாகி 6 ஆண்டுகள் நிறைவு!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஒருவிதமான பரபரப்பு இருக்கும். தியேட்டர்கள் முன்பு ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். அதே வழக்கமான உற்சாகத்துக்கு மத்தியில் 2018 ஆம் ஆண்டு ஜூன் 7-ல் உலகம் முழுவதும் ரிலீஸானது 'காலா'.

மூன்று மொழிகளில் உருவான காலா

இந்தப் படத்தை தனுஷ், அவரது வொண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். ஒரு மலேசிய கேங்க்ஸ்டராக 'கபாலி' படத்தில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த், இந்தப் படத்தில் மும்பையில் வாழும் நெல்லை தமிழராக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி இருந்த இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

நில அரசியலை பேசும் காலா

மும்பையில் வாழும் தமிழர்கள் கதைக்களம், ரஜினி காந்தின் நடிப்பு, அவருக்கே உரிய நகைச்சுவை, நில அரசியல், ஆதிக்கத்தை எதிர்கொள்வது, அனல் பறக்கும் வசனங்கள் என்று பா.ரஞ்சித் படமாக 'காலா' வந்தது. தாராவியின் காவலன் ரஜினி. இவரை மீறி தாராவியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். தாராவியின் மொத்த இடத்தையும் தனது அதிகாரத்தால் பறிக்க நினைக்கிறார் அதிகார பலம்மிக்க நானா படேகர். இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

பிம்பத்தை உடைத்ததா?

வழக்கமான ரஜினி படம் என்ற பிம்பத்தை உடைத்ததால் 'காலா' ரஜினி ரசிகர்களிடேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சு இன்றும் உள்ளது. இது படம் பார்த்த அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம். ரஜினி படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால், காலாவில் ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. ‘காலா’ அரசியல் படம் இல்லைங்க... ஆனா, படத்துல அரசியல் இருக்குனு" என்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுல ரஜினிகாந்த் சொன்ன விஷயம்தான். படத்தின் வசனங்கள் தாராவியின் நில அரசியலைக் கண்முன் நிற்க வைத்திருக்கிறது என்றால், மிகையில்லை. ரஜினி மூலமாக இயக்குனர் பா.ரஞ்சித் பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு குரல் கொடுக்கும் ஒரு வாய்ப்பு 'காலா'.

'காலா' திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றி நடை போட்டிருந்தாலும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இது ரஜினி படமா அல்லது ரஞ்சித் படமா என்று ரசிகர்கள் பலரும் அப்போதே கேள்வி எழுப்பி இருந்தனர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரஜினியை முழுமையாக நேசிக்கும் தீவிர ரஜினி ரசிகர்கள் மட்டுமே இப்படத்தையும், இதில் பேசப்பட்ட கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டனர்.

6 ஆண்டுகள் நிறைவு

எது எப்படி இருந்தாலும் இப்படம் வெளிவந்து இன்றோடு 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரஜினி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனாலும் நேற்று ரிலீசானது போல் உள்ளது 'காலா'. ஆனால், 6 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலம் கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் வைரமாக 'காலா' ஜொலித்து கொண்டே இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.