கேட்டு வாங்கி தவறவிட்ட வாய்ப்பு கனகச்சிதமாக வளைத்து போட்ட கமல்.. இந்தியன் ரஜினியை தாண்டி கமலிடன் சென்றது ஏன்?
இந்தியன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த். ஆனால் சில காரணங்களால் அந்தக்கதை கமலிடம் சென்றது? - ஷங்கர் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பதை பார்க்கலாம்.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கமல்ஹாசன். எப்போதும் தன்னை அப்டேட்டடாக வைத்து அவர் தற்போது ஏ.ஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ள அமெரிக்காச் சென்று இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கடுமையான விமர்சனங்களை பெற்றது.
தாறுமாறாக விமர்சனம் செய்தனர்.
ஓடிடியில் வெளியான போதும், நெட்டிசன்கள் படத்தை தாறுமாறாக விமர்சனம் செய்தனர். பலரும் இந்தியன் 1 திரைப்படத்தில் இருந்த சுவாரசியத்தன்மை கொஞ்சம் கூட இந்தியன் 2 -வில் இல்லை என்றும் இந்தியன் படத்தை இரண்டாம் பாகமாக எடுத்திருக்கவே வேண்டாம் என்று விமர்சனம் செய்தனர்.
காரணம், ஷங்கரின் திகட்டாத ஸ்கிரீன் ப்ளே, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள், சுதந்திரப்போர் சம்பந்தமான எழுச்சிமிகு காட்சிகள், கமல்ஹாசனின் நடிப்பு உள்ளிட்டவை இந்தியன் படத்தால் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். இதனால் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், இந்தியன் படத்தை விட, இந்தியன் 2 பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.
கமலுக்கு பதிலாக ரஜினிதான்
அப்படிப்பட்ட கல்ட் கிளாசிக் திரைப்படமான இந்தியன் 1 -ல் முதலில் கமலுக்கு பதிலாக ரஜினிதான் நடிப்பதாக இருந்தது ஆம், இந்தியன் 1 -ல் கதாநாயகனாக நடிக்க வைக்க முதல் ஷங்கர் தேர்வு செய்திருந்தது நடிகர் ரஜினிகாந்தைத்தான். இதனை அந்தப்படத்தில் உதவியாளராக பணியாற்றிய வசந்த பாலானே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை
அவர் பேசும் போது, “ ஜென்டில் மேன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்த ஷங்கரை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனக்கு ஏதும் ஸ்கிரிப்ட் இருக்கிறதா என்று கேட்டார். இதனையடுத்து இந்தியன் கதையை ‘பெரிய மனுஷன்’ என்ற தலைப்பில் ஷங்கர் ரஜினியிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், அவரால் கதையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
கனகச்சிதமாக பயன்படுத்திய கமல்ஹாசன்
காரணம், அவர் அடுத்தடுத்த கமிட்மெண்டுகளில் சிக்கி இருந்தார். இதனையடுத்து அவரால் செய்ய முடியாது என்று தெரிய மறுகணமே கதையை கமலுக்கு விவரித்து இருக்கிறார் ஷங்கர். கமலுக்கு கதை பிடித்துப்போக, அவர் உள்ளே வந்தார். சேனாதிபதி கேரக்டர் உருவானது.” என்றார்.
முன்னதாக, இந்தக்கதை நாகர்ஜூனா மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கும் சென்று இருக்கிறது. அதில் இவர்கள் மகனாகவும், நடிகர் ராஜசேகர் தந்தையாகவும் நடிக்க கமிட் ஆவதாக இருந்து இருக்கிறது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்