தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: விஜயகாந்த மாதிரி ஒருவரை இனிமே பார்க்க முடியாது.. ரஜினிகாந்த் உருக்கம்!

Rajinikanth: விஜயகாந்த மாதிரி ஒருவரை இனிமே பார்க்க முடியாது.. ரஜினிகாந்த் உருக்கம்!

Aarthi Balaji HT Tamil
May 16, 2024 09:14 AM IST

Rajinikanth: விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

விஜயகாந்த மாதிரி ஒருவரை இனிமே பார்க்க முடியாது.. ரஜினிகாந்த் உருக்கம்
விஜயகாந்த மாதிரி ஒருவரை இனிமே பார்க்க முடியாது.. ரஜினிகாந்த் உருக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நண்பரும், மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தை வீடியோ செய்தியில் அன்புடன் நினைவு கூர்ந்தார். விஜயகாந்துக்கு மரணத்திற்கு பின் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார். 

அந்த வீடியோவில், பத்மா புத்தகங்களில் இனி மறைந்த நடிகர்-அரசியல்வாதிகளின் வரலாறு இடம் பெறும் என்று கூறியுள்ளார். அவரை தனது அன்பு நண்பர் என்று அழைத்த ரஜினிகாந்த், அவரை மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

கிடைத்த உயரிய மரியாதை

அந்த வீடியோவில் ரஜினிகாந்த், "மறைந்த நடிகரும் எனது நண்பருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. பத்மா 2024 புத்தகங்களில் அவரது வரலாறு இருக்கும், அது ஒரு கொண்டாட்ட நிகழ்வு. 

மதுரையில் பிறந்த மதுரை வீரன்

இது அவருக்கு கிடைத்த உயரிய மரியாதை. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விஜயகாந்த் இன்னும் நம்முடன் இல்லை என்று. இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் " என பேசி உள்ளார்.

மே 9 ஆம் தேதி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் பத்மபூஷன் பெற புது டெல்லி சென்றனர். பிரேமலதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிக்சை எடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலை 6.10 மணிக்கு காலமானார்.

அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும், பின்னர் தீவுத்திடலிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள், அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் அவரது உதவும் குணத்தையும், அவர் தன்னை பார்க்க வருபவர்களுக்கு உணவு வழங்குவதில் காட்டும் அக்கறையும் சிலாகித்தனர்.

டிசம்பர் 29ஆம் தேதி மாலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பலரும் சென்று தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என தேமுதிக சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகம் உள்ள சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்