5 Years of Petta: "இந்த ஆட்டம் போதுமா கண்ணா?" ரசிகர்களை குஷிப்படுத்திய ரஜினியின் பேட்ட
பத்து ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் புகைப்பது போன்ற காட்சியில் பேட்ட படத்தில் தோன்று ரஜினி, புகைப்பிடிப்பது உடல்நலத்துக்கு கேடு என அட்வைஸ் செய்திருப்பார். அத்துடன் கோலிட்டில் 90 பிற்பகுதியிலும், 2கே ஆரம்பகாலத்திலும் டாப் நாயகிகளாக இருந்த சிம்ரன்,த்ரிஷா முதல் முறையாக ரஜினியின் ஜோடியாக நடித்திருப்பார்கள்
பிரபல இயக்குநர்கள், டெக்னீஷியன்களை என தனது படங்களில் இடம்பிடிக்கும் பார்முலாவை லிங்கா படத்தின் தோல்விக்கு பின்னர் மாற்றியமைத்தார். அப்படி முற்றிலும் இளம் படையுடன் அவர் பயணித்த முதல் படமாக பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படம் அமைந்தது.
கபாலிக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் ரஞ்சித்துடன் கைகோர்த்த ரஜினிகாந்த் காலா என்ற படத்திலும் நடித்தார். இளம் இயக்குநர்களாலும் தனது ரசிகர்களை திருப்திபடுத்த முடியும் என முழுவதுமாக நம்பிய ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக அவ்வாறு கார்த்திக் சுப்பராஜுடன் கைகோர்த்த படம் தான் பேட்ட.
கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தால் இம்ரஸ் ஆன ரஜினிகாந்த், பேட்ட கதையில் நடிக்க சம்மதித்ததாக கூறப்பட்டது. படத்தின் கதையை பொறுத்தவரை நண்பனை கொலை செய்த அவனது காதலி மனைவியின் அண்ணனை பழிவாங்குவது என்ற தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட அக்மார்க் பழைய கதையை.
ஆனால் இதில் நண்பனின் மகனை காப்பாற்ற எடுக்கும் வெறித்தனமான அவதாரம், வயதான பின்னரும் சிம்ரன் மீது காதல் மலர்ந்து பின்பு வெளிப்படுத்தும் குறும்புதனம் என அவரது சிவாஜி படம் வசனம் போன்றே பூ பாதை, சிங்க பாதை என இரண்டிலும் வெரைட்டி காட்டியிருப்பார்.
ரஜினிக்கு எதிராக வெயிட்டான வில்லனாக ஆரம்பத்தில் சோப்லாங்கியாக, பின்னர் அலட்டல் இல்லாத வில்லனாகவும் மிரட்டரலான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிப்பு அசுரன் நாவஸுதின் சித்திக் தோன்றியிருப்பார். மற்றொரு வில்லனாக அலட்டிக்கொள்ளாத கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
சசிக்குமார், இயக்குநர் மகேந்திரன், குருசோசமசுந்தரம், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா, சனத், மேக்னா ஆகாஷ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 90ஸ் கடைசி காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன், 2கே ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா ஆகியோர் ரஜினிக்கு முதல் முறையாக ஜோடியாக நடித்திருப்பார்கள். மலைாளம், இந்தி சினிமாக்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சசிக்குமார் காதலியாக நடித்திருப்பார்.
இந்த படத்துக்கு முன்னர் வந்த கபாலி, காலா ஆகிய படங்களின் கதை அழுத்தமாக இருந்தாலும் ரஜினி படங்களில் அவரிடம் வெளிபடும் ஸ்டைல், ஸ்கிரீன் பிரசென்ஸ் போன்றவை மிஸ்ஸாவாத ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களின் மொத்த ஏக்கத்தையயும் பேட்ட படத்தில் தீர்த்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ்.
அத்துடன் பேட்ட மூலம் முதல் முறையாக கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த படத்துக்கு இசையமைத்தார் அனிருத். பாடல் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் மாஸ் அம்சத்தை தூக்கி நிறுத்தி விசில் பறக்க செய்தார்.
இதுவரை ரஜினிகாந்த் படத்தில் இல்லாத புதுவித கலர் டோனிலும், லெக்கேஷ்ன்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கும் திரு, கண்களுக்கு விருந்து படைத்திருப்பார்.
2008இல் வெளியான குசேலன் படத்துக்கு பின்னர் 10 ஆண்டுகள் கழித்து பேட்ட படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பார். அப்போது சீகரெட் உடம்புக்கு நல்லது இல்லை. என அனுபவத்துல சொல்றேன் என அட்வைஸ் செய்திருப்பார்.
2011இல் தீவிர உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டு வந்தார் ரஜினிகாந்த். அதை நினைவுபடுத்தும் விதமாக அந்த காட்சி அமைந்திருக்கும்.
இந்த படத்தை ஓபன் கிளைமாக்ஸாக கார்த்திக் சுப்பராஜ் முடித்திருப்பார். படம் முடிவதற்கு முந்தைய பிரேமில் ரஜினி இந்த ஆட்டம் போதுமா கண்ணா என ரசிகர்களை கேட்கும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம், எதிர்பார்ப்பு பூர்த்தி செய்த பக்கா ஆக்ஷன் த்ரில்லர் செண்டிமென்ட கொண்ட மசாலா திரைப்படமாக அமைந்திருந்த பேட்ட வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்