தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth Starrer Lal Salaam Box Office Collection On Day 1

Lal Salaam Box Office Day 1: பாஸிடிவ் விமர்சனங்கள், காற்று வாங்கிய திரையரங்குகள் - லால் சலாம் முதல் நாள் வசூல் எவ்வளவு?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 10, 2024 08:25 AM IST

ரஜினிகாந்தின் வழக்கமான ஓபனிங் லால் சலாம் படத்துக்கு கிடைக்காத போதிலும் நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் ஓபனிங் இந்த படத்துக்கு கிடைக்காமல் போயுள்ளது. ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் பேனர்கள் வைத்து ஆட்டம் பாட்டம் என படத்தை ரிலீஸை கொண்டாடினர். தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம் இருந்து வந்தது.

படத்தின் காலை காட்சி ஹவுஸ்புல்லாக ஓடிய நிலையில், படத்தை பார்த்தவர்களும் நேர்மறையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் மாலை, இரவு காட்சிகளில் பெரிதாக கூட்டம் இல்லை என கூறப்படுகிறது.

லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 4.3 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இது ரஜினி படங்களில் வழக்கமான முதல் நாள் வசூலை ஒப்பிடுகையில் குறைவானது தான். இன்று வார விடுமுறை தொடங்குவதால் குடும்பம் ரசிகர்களும் திரையரங்குக்கு படையெடுப்பார்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த படம் மதநல்லிணகத்தை பேசும் விதமாக இருப்பதாக கூறப்பட்டாலும், இசை வெளியீட்டு விழாவின்போது ரஜினி சங்கி இல்லை என்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு, படத்தின் ஹீரோயின்களின் ஒருவராக வரும் தன்யா பாலகிருஷ்ணன் தமிழர்களுக்கு எதிராக முன்பு கூறிய கருத்து போன்றவை சர்ச்சையானது.

கிரிக்கெட் விளையாட்டை மையைப்படுத்தி ஸ்போர்ஸ் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவகையாக உள்ளது. படத்தில் ’மொய்தீன் பாய்’ என்ற கேரக்டரில் தோன்றும் அவர் சுமார் ஒரு மணி நேரம் வரை வருகிறார்.

படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். விஷ்ணு ரங்கசாமி திரைக்கதை அமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. 

முன்னதாக, லால் சலாம் படம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது: " அப்பாவை இயக்குவது என் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத ஒன்று. அது ஒரு ஆசீர்வாதம். - அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு மினி மாஸ்டர் கிளாஸ் போன்றே இருந்தது. செட்டில் தன்னை எவ்வாறு கையாள்கிறார் மற்றும் ஒரு தொழில்முறை கலைஞராக எப்படி இருக்கிறார் என்பதை கண்டு வியப்பாக இருந்தது.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் தனது பணி மீது காட்டும் தீவிரம், இந்த வயதிலும் அவரது உழைப்பை பலருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக உள்ளது. நாம் அனைவரும் அவரை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அவருடன் பணிபுரிந்த மற்ற இயக்குநர்கள் போல் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிக்கிறேன். அப்பா ஒரு கலைஞராகவும், குறிப்பாக லால் சலாமில், ஒரு நடிகராகவும், ஒரு எண்டர்டெய்னராகவும் மட்டுமல்லாமல் தனது அற்புத பெர்பாண்மென்ஸ் மூலம் தனது முத்திரையைப் பதித்துள்ளார்" என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.