31 years of Annamalai: மாஸ் படங்களுக்கென டிரெண்ட் செட்டர் - போஸ்டர்கள் ஒட்ட தடை! அச்சுறுதலை கடந்து வெள்ளி விழா கண்ட படம்
அண்ணாமலை படத்தின் வெளியீட்டின் போது போஸ்டர்கள் ஒட்ட தடை முதல் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அதை கடந்து வெளியாகி வெள்ளி விழா கண்ட படமானது. ஹீரோவுக்கான ஓபனிங் பாடல், ஹீரோவுக்கான தீம் மியூசிக் என தமிழில் மாஸ் படங்களுக்கென டிரெண்ட் செட்டர் படமாகவும் அண்ணாமலை இருந்தது.

பாலிவுட்டில் சக்கைபோடு போட்ட குட்கார்ஸ் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா கேரியரில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய படம் தான் அண்ணமலை. இந்த படம் பற்றி பேசும்போது, படத்தின் ரஜினி பேசிய "மலை டா, அண்ணாமலை" என்ற வசனம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியாது.
குட்கார்ஸ் படமே ஆங்கில எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய கேன் அண்ட் அபெல் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இருப்பினும் தமிழ் சினிமாக்களில் ஹீரோவுக்கான ஓபனிங் பாடல், ஹீரோவுக்கான இண்ட்ரே மியூசில் தீம் என மாஸ் மசாலா படங்களுக்கென்று சில ட்ரெண்ட்களை இந்த படம் உருவாக்கியது
நட்பின் மகத்துவத்தை போற்றும் கதை
நட்பு, துரோகம், பழிவாங்கல் என்பது தான் அண்ணாமலை படத்தின் ஒன்லைன் என்றாலும் இறுதியில் நட்பின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக முடித்திருப்பார்கள்.
ரஜினி, சரத்குமார் சிறு வயதில் இருந்து நண்பர்களாக இருக்கிறார்ரகள். பால்காரனாக இருக்கும் ரஜினிக்கும், பணக்காரனாக இருக்கும் சரத்பாபுவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறார் சரத்குமார் தந்தையான ராதா ரவி. இதன் பிறகு நண்பர்கள் சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை. இதை மாஸ் மசாலா அம்சங்கள், பஞ்ச் வசனங்கள், விறுவிறுப்பான காட்சிகளுடன் கூடிய திரைக்கதையில் உருவாக்கியிருப்பார்கள்.
ரஜினி ஜோடியாக குஷ்பூ நடித்திருப்பார். தாயாக மனோரமா, மற்றொரு நண்பராக ஜனகராஜ் நடித்திருப்பார். ரேகா, நிழல்கள் ரவி, கரண் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்
முதல் முறையாக தேவா இசை
ரஜினிகாந்த் படத்துக்காக தேனிசை தென்றல் தேவா முதல் முறையாக அண்ணாமலை படத்துக்கு தான் இசையமைத்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டாக ஒலித்தது.
டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் தீம் மியூசிக்குடன் தோன்றியது முதலில் இந்த படத்தில் தான். ஓபனிங் பாடலான வந்தேன்டா பால்காரன் என பாஸ்ட் பீட்டிலும், கொண்டையில் தாழம் பூ, அண்ணாமலை அண்ணாமலை, ரெக்க கட்டி பறக்குதடா பாடல் மெலடியிலும், ஒரு பெண் புறா என்ற தத்துவ பாடலும், வெற்றி நிச்சயம் என்ற மோடிவேஷன் பாடலும் என வைரமுத்து வரிகளில், தேவா இசையில் வெரைட்டியான அரிதாரம் பூசியிருப்பார்.
அச்சுறுத்தலை மீறி அசத்திய அண்ணாமலை
அண்ணாமலை படத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாடு அரசின் ஆளும் கட்சியால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. படத்தின் போஸ்டர்கள் ஓட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் படத்துக்கு போதிய விளம்பரம் கிடைக்காமல் போனது. இருப்பினும் படம் வெளியீட்டுக்கு பிறகு ரசிகர்கள், பார்வையாளர்களின் வரவேற்பால் 175 நாள்கள் வரை ஓடி வெள்ளி விழா கண்ட படமானது.
அத்துடன் அந்த காலகட்டத்தில் தமிழில் அதிக வசூலை பெற்ற படமாக அண்ணாமலை மாறியதோடு தெலுங்கு, கன்னடா மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் படங்களை அண்ணாமலைக்கு முன், பின் என்று சொல்லும் அளவில் அவரது சிறந்த மாஸ் மசாலா திரைப்படமாக இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தமிழ் சினிமாவில் மாஸ் மசாலா படங்களுக்கென புதிய ட்ரெண்ட் செட்டர் படமாக இருந்த அண்ணாமலை வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்