தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: அந்த படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாது.. ரஜினி சொல்லியதால் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட நடிகை

Rajinikanth: அந்த படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாது.. ரஜினி சொல்லியதால் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட நடிகை

Aarthi Balaji HT Tamil
Jun 07, 2024 06:54 AM IST

Rajinikanth: முத்து படத்தில் நடிகை ஊர்வசி, ராதாரவின் மகள் பத்மினி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவரை நடிக்க வைக்க கூடாது என ரஜினிகாந்த் கறாராக சொல்லிவிட்டார்.

அந்த படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாது.. ரஜினி சொல்லியதால் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட நடிகை
அந்த படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாது.. ரஜினி சொல்லியதால் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட நடிகை

ட்ரெண்டிங் செய்திகள்

முத்து திரைப்படம் மலையாளத்தில் மோகன் லாலின் சூப்பர் ஹிட் படமான தொன்மாவியன் கொம்பாட்டின் தமிழ் ரீமேக்காக வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கியவர் கே. எஸ். ரவிக்குமார். இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் ரஜினியின் வெற்றிப் படங்களில் ஒன்றாக முத்து இன்றும் அறியப்படுகிறார்.

அவருடன் இணைந்து மீனா, ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். 1996 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் இப்படம் பெற்றது. ஜப்பானில் ஜப்பானில் வெளியான முதல் இந்தியப் படமும் முத்து தான்.

இந்நிலையில் முத்து படத்தில் நடிகை ஊர்வசி, ராதாரவின் மகள் பத்மினி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவரை நடிக்க வைக்க கூடாது என ரஜினிகாந்த் கறாராக சொல்லிவிட்டார். இதனை சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் நடிகர் ரமேஷ் கண்ணா கூறினார்.

முத்து படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அவர் கூறுகையில், “ முத்து படத்தில் நடிகை ராதாரவின் மகள் பத்மினி வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டது நடிகை ஊர்வசி தான். ஊர்வசியின் குறும்புத்தனமும், விளையாட்டுத்தனமும் அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் நான் உட்பட உதவி இயக்குநர்கள் உணர்ந்தோம்.

இயக்குனருக்கும், ஊர்வசி நடிப்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் முத்து படப்பிடிப்பின் போது சில சம்பவங்கள் நடக்கின்றன. முத்து படத்தில் நடிகை ஊர்வசி நடிக்கக் கூடாது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிவிட்டு அதை ஊர்வசிக்கும் ​​போனில் அழைத்து சொன்னார்.

ஊர்வசி வேண்டாம்

ஊர்வசி இப்போது வளர்ந்து வருகிறார். அப்படியிருக்கையில், அவரை இப்படி துணை வேடத்தில் நடிக்க வைப்பது சரியில்லை. படத்தில் பத்மினியின் பாத்திரம் அவ்வளவு முக்கியமில்லை. எனவே, இந்தப் படத்தில் ஊர்வசி இருக்கக் கூடாது என்று படக்குழுவினரிடம் கூறி உள்ளார். அவன் ஊர்வசிக்கு போன் செய்து இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்து சொன்னார். அப்படி தான் ஊர்வசிக்கு பதிலாக நடிகை சுபாஸ்ரீ கேரக்டரில் நடித்தார் “ என்றார். 

குழந்தை நட்சத்திரமாக கதிர்மண்டபம் என்ற மலையாளத் திரைப்படத்தில் 10 வயதாக இருக்கும் போது நடிப்பு துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் நடிகை ஊர்வசி. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்