Rajinikanth Press Meet: அம்பானி வீட்டு கல்யாணம்.. “ ஏக மகிழ்ச்சி… ஆம்ஸ்ட்ராங் என்கவுண்டர் பற்றி..” - ரஜினிகாந்த்
Rajinikanth Press Meet: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு ரஜினிகாந்த்..
Rajinikanth Press Meet: அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை
அப்போது ரஜினிகாந்த் பேசும் போது, “ அது, அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம். ஆகையால், அவர்கள் அதனை மிகவும் பிரமாண்டமாக செய்தார்கள். அதில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருந்தது. இந்தியன் 2 படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நாளை பார்க்க இருக்கிறேன்.” என்று பேசினார்.
தொடர்ந்து, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் முக்கிய குற்றவாளியான திரு வேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
ப்ளாப் ஆன இந்தியன்
முன்னதாக, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று, மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கரையும் நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
தன்னுடைய முந்தைய திரைப்படங்களில் எழுத்தாளர் சுஜாதாவுடன் இயக்குநர் ஷங்கர் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், 2008ம் ஆண்டு சுஜாதா மறைந்த பின்னர் பிற எழுத்தாளர்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார். ஆனாலும், சுஜாதாவுடன் கைகோர்த்து பணியாற்றிய போது, அவரது படங்களில் இருந்த டச்..இப்போது இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த ஷங்கர் கொடுத்த பேட்டியில் சுஜாதாவுடன் தான் பணியாற்றும் முறை குறித்து பேசி இருக்கிறார்.
அவுட் லைன் ஸ்டோரி என்னுடையதாக இருக்கும்
இது குறித்து அவர் அதில் பேசும் போது, “ நான் சுஜாதாவுடன் பணிபுரியும் பொழுது, முதலில் நான் ஒரு அவுட்லைன் ஸ்டோரியை ரெடி செய்து விடுவேன். அதன் பின்னர் நாங்கள் கதை விவாதத்தில் உட்காருவோம். அந்த கதை விவாதத்தில் எழுத்தாளர் சுஜாதாவும் இருப்பார். ஆனால் அவர் அந்த விவாதத்தில் எதுவுமே பேச மாட்டார். சீன்களை பற்றி டிஸ்கஸ் செய்யவும் மாட்டார்.
அதே போல புது சீன்களையோ, வசனங்களையோ அல்லது கதை பற்றியோ எதுவும் சொல்ல மாட்டார். அவர் அமைதியாக நாங்கள் பேசுவதை கவனித்து கொண்டு இருப்பார். நாங்கள் தொடர்ந்து அந்த கதையை பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அந்த கதை வளர்ந்து கொண்டே இருக்கும். எங்கேயாவது நாங்கள் தடுமாறி நிற்கும் பொழுது, அவர் ஏதாவது ஒரு எடுத்துக்காட்டுடன் வந்து, இந்த சிக்கலில் அவர்கள் அப்படி யோசித்தார்கள். ஆகையால் நீங்களும் அப்படி யோசியுங்கள் என்று எங்களை வழிநடத்துவார்.
அவர் வழிநடுத்துவார்
முழு கதையையும் தயார் செய்த பின்னர், அந்தக் கதையின் முதல் காட்சியிலிருந்து, சுபம் வரை முழுவதுமாக எழுதுவதோடு, ஒவ்வொரு காட்சியிலும், எனக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் விளக்கி ஒரு கேசட்டில் பதிவு செய்து, அவரிடம் கொடுத்து விடுவேன். அதன் பின்னர், அவர் அதை அவரது வெர்ஷனில் மீண்டும் ஒருமுறை எழுதி, எங்களுக்கு அனுப்புவார். அவர் எழுதிக் கொண்டு வரும் பொழுது, அது வேறு மாதிரி, மிகவும் அழகாக இருக்கும்
அதில் திரைப்படத்திற்கு ஏற்றவாறு நாங்கள் சில திருத்தங்களை செய்வோம். அதை மறுபடியும் நான் அவருக்கு அனுப்புவேன். அவர் பெரும்பாலும் அதில் திருத்தங்களை செய்ய மாட்டார். எழுத்து பிழைகளை மட்டும் சரிசெய்து எனக்கு அனுப்பி வைப்பார். அப்படித்தான் நாங்கள் வேலை பார்ப்போம். ” என்று பேசினார்.
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்