தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Padayapparerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
May 20, 2024 05:51 PM IST

PadayappaRerelease: முத்து திரைப்படத்தின் ரீ ரிலிஸின் போது, தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் ஆரவாரத்தை ரசித்த கே.எஸ் ரவிகுமார் அப்போதே அடுத்ததாக முத்து திரைப்படம் ரீ ரிலிஸ் ஆகும் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது - படையப்பா ரீ ரிலிஸ் அப்டேட்!

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!
PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

ட்ரெண்டிங் செய்திகள்

ரஜினியை சந்தித்த தேனப்பன்:

 

கமலுக்கு தேவர்மகன் படம் எப்படியோ அதுபோல் ரஜினிக்கு படையப்பா என்று கூறலாம். இந்தப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இந்தப்படத்தை ரீ ரிலிஸ் செய்ய, அந்தப்படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன் ரஜினியை சந்தித்து பேசி இருப்பதாகவும், அதற்கு ரஜினி தரப்பில் இருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

அவர்கள் சந்தித்துக்கொண்டது தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக, முத்து திரைப்படத்தின் ரீ ரிலிஸின் போது, தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் ஆரவாரத்தை ரசித்த கே.எஸ் ரவிகுமார் அப்போதே அடுத்ததாக முத்து திரைப்படம் ரீ ரிலிஸ் ஆகும் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

படையப்பா திரைப்படம் ஒரு பார்வை: 

 

படையப்பா டத்தில் பவர்புல்லான வில்லன் இருப்பதும், அவரை வீழ்த்துவதுமாக இருந்த வழக்கமான ரஜினி பட பார்முலாவில் இருந்து மாறுபட்ட படமாக படையப்பா படத்தின் கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் வில்லன் கிடையாது. ஆனால் ரஜினியை எதிர்க்கும் துணிச்சலுடன் வரும் பெண்ணாக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

இந்த கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை மையமாக வைத்து வடிவமைத்ததாக படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பல பேட்டிகளில் கூறியுள்ளார். படையப்பா முதல் பாதியில் நண்பர்களுடன் லூட்டி, காதல் என ஜாலியான கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினிகாந்த், இரண்டாம் பாதியில் பாட்ஷா பாய் கேரக்டரை நினைவுபடுத்தும் விதமாக தாடி வைத்து லுக்கில் சீரியஸாக தோன்றியிருப்பார்.

ரஜினியின் ஜோடியாக செளந்தர்யா நடித்திருப்பார். இந்த படத்துக்கு முன் வெளியான அருணாச்சலம் படத்தில் செளந்தர்யா நடித்திருந்த நிலையில், மீண்டும் அவரை ஜோடியாக்கினர். ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் ஷாலினியை நடிக்க வைக்க முயற்சிகளை நடைபெற்றது. ஆனால் கடைசியில் சித்தாரா கமிட் செய்யப்பட்டார்.

தெறிக்கவிட்ட படையப்பா பஞ்ச் வசனங்கள்:

 

கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி காதல், ஆக்‌ஷன், செண்டிமென்ட், எமோஷன் கலந்து பக்காவான ஜனரஞ்சக படமாக படையப்பா படத்தை உருவாக்கியிருப்பார்கள். காமெடியனாக செந்தில், ரமேஷ் கன்னா, முக்கிய கதாபாத்திரங்களில் ராதா ரவி, நாசர், லட்சுமி, அனுமோகன், மணிவன்னண் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

ரஜினி படங்கள் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கு குறையிருக்காது. அந்த வகையில் இந்த படத்தில் என் வழி தனி வழி, அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் என்னைக்கும் நல்லா வாழ்ந்ததா சரித்தரமே இல்ல, வாயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல, கஷ்ட்டப்படாம கிடைக்கிறது நிலைக்காது போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமானதுடன் இன்று வரையில் பேசப்பட்டு வருகிறது.

படையப்பா படத்தில் ரஜினியின் பஞ்ச் வசனம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. அப்போது படத்தின் பஞ்ச் வசனம் லீக் ஆகக்கூடாது என்பதற்காக ரஜினியும் - இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரும் ட்ரிக் ஒன்றை செய்தனர்.

அதில் பஞ்ச் வசன காட்சி ஷுட்டிங் செய்யும் போது, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆக்‌ஷன் சொன்னதும் முழுமையான எக்ஸ்பிரஷனுடன் வெறும் லிப் அசைவுகளை மட்டும் ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்.  இதனால் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியாமல் குழம்பி போயுள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு பஞ்ச் வசனம் பேசும்போது அந்த டயலாக் லீக் ஆகாமல் இருக்க ரஜினிகாந்த் இப்படி ட்ரிக் செய்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை: 1999ஆம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக படையப்பா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. முதல் முறையாக உலகம் முழுவதும் 200 பிரண்டுகளுக்கு மேல் வெளியான படம் என்ற பெருமை படையப்பா படத்துக்கு உண்டு. 

இந்த படம் பாகஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. அந்த காலகட்டத்தில் அதிக வசூலை குவித்த படமாக உள்ளது. ரிலீஸுக்கு முன்பே ரூ. 3 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் ரிலீசுக்கு முன் கோடிகளில் வியாபாரம் செய்யப்பட்ட படம் என்ற பெருமையும் படையப்பாவுக்கு உண்டு

கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. பின்னணி இசையும் பட்டையை கிளப்பும் விதமாக அமைந்தன. ஏ.ஆர். ரஹ்மானுக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

படத்தின் முக்கிய காட்சியாக வரும் ரஜினிகாந்த் - ரம்யா கிருஷ்ணன் சந்திப்பு காட்சியில், வீட்டின் முகப்பில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலை பிடித்து இழுக்கும் காட்சிக்கு இசையமைக்க வேண்டி இருந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் பிஸியாக இருந்துள்ளார். அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் உதவியுடன் படத்துக்கு ஏற்கனவே ரஜினிக்காக போட்ட பிஜிஎம்களை வைத்து மிக்ஸ் செய்து ஊஞ்சல் காட்சிக்கு இசையமைத்துள்ளனர்.

பின்னர் இதை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் மிக்ஸ் செய்த பிஜிஎம் அப்படியே பொருந்தி போக, எந்த மாற்றமும் இல்லாமல் விட்டுள்ளார். படையப்பா படத்தின் ஐகானிக் பிஜிஎம்மில் இந்த காட்சியின் இசை இடம்பிடித்திருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்