தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth Day: 'Happy Rajinikanth Day Shivaji Rao' Wishes Daughter Aishwarya On Holi

Rajinikanth Day:'ரஜினிகாந்த் தின வாழ்த்துக்கள் சிவாஜி ராவ்' ஹோலி தினத்தில் மகள் ஐஸ்வர்யா வாழ்த்து!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 26, 2024 02:54 PM IST

Rajinikanth Day: நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரஜினி காந்த் எப்போதும் தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாட முயற்சிப்பார். இந்த ஆண்டும் அதேபோல் தனது குடும்பத்துடன் ஹோலியை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

'ரஜினிகாந்த் தின வாழ்த்துக்கள் சிவாஜி ராவ்' ஹோலி தினத்தில் மகள் ஐஸ்வர்யா வாழ்த்து!
'ரஜினிகாந்த் தின வாழ்த்துக்கள் சிவாஜி ராவ்' ஹோலி தினத்தில் மகள் ஐஸ்வர்யா வாழ்த்து! (aishwaryarajini / Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரையுலக பிரபலங்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் தனது குடும்பத்துடன் நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளர். ரஜினி காந்த் எப்போதும் தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாட முயற்சிப்பார். இந்த ஆண்டும் அதேபோல் தனது குடும்பத்துடன் ஹோலியை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடியதை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'ரஜினிகாந்த் தின வாழ்த்துக்கள் சிவாஜி ராவ்' என்று பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா அப்படி பதிவிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது.

ரஜினியின் குரு பாலச்சந்தர். அவர் 49 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி ராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என ஒரு ஹோலி பண்டிகை நாளின் போது தான் மாற்றினார். பின்னர் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் இன்று ரஜினி காந்த் என்ற பெயரில் உலக புகழ் பெற்ற நடிகராக மாறி உள்ளார்.

இதை குறிக்கும் வகையில்தான் இன்றைய நாளை ரஜினிகாந்த் டே என்றே அவரது குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் ரஜினி காந்த்தின் பேரன்கள் உள்ளனர். மகள் ஐஸ்வர்யா கைகளில் பலூன்களுடன் சிரித்த வண்ணம் உள்ளார். ரஜினிகாந்த் தனது பேரன்கள் கையில் கலர் எடுப்பதை ஆர்வமுடன் பார்த்து வருகிறார்.

ஐஸ்வர்யாவின் பதிவும் தற்போதைய ஹோலி புகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவர் வெளியில் தான் ரஜினிகாந்த் வீட்டில் சிவாஜி ராவ்தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பலர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக தனது தந்தை ரஜினிகாந்தை இயக்கிய லால் சலாம் படம் பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசுகையில் , “அப்பாவை (அப்பாவை) இயக்குவது என் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத ஒன்று, அது ஒரு ஆசீர்வாதம். சுருக்கமாகச் சொல்வதென்றால், அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு மினி மாஸ்டர் கிளாஸ் - அவர் செட்டில் தன்னை எவ்வாறு கையாள்கிறார் மற்றும் ஒரு தொழில்முறை, தொழில்துறையில் ஒரு கலைஞராக இருக்கிறார்.

“அவரது அர்ப்பணிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வேலையின் தீவிரம், இந்த வயதிலும் அவரது வாழ்க்கையின் நேரத்திலும் கூட, தொழில்துறையில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவரிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் உணர்கிறார், அதுதான் நாம் இருந்த சூழ்நிலையின் அழகு என்று நான் நினைக்கிறேன். அவருடன் பணிபுரிந்த மற்ற திரைப்படத் தயாரிப்பாளரைப் போலவே ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிக்கிறேன். அப்பா ஒரு கலைஞராகவும், குறிப்பாக லால் சலாமில், ஒரு நடிகராகவும், நடிகராகவும், ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், ஒரு நடிகராக நம் மீது தனது முத்திரையைப் பதித்துள்ளார்,” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்