ரஜினிக்கு வந்த சோதனை.. பொண்ணுங்களால இன்னும் என்னென்ன பாக்க போறாரே.. பாவம் பார்க்கும் ரசிகர்கள்..
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் மகள் எடுத்த படம் ஒன்று ஓடிடி தளத்திற்கு வரும் முன்பே டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே அவரது ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்கும் என அனைவரும் கூறி வரும் நிலையில், அவருக்கா இந்த நிலை எனக் கேட்கும் அளவிற்கான சம்பவங்கள் நடந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தனது முத்திரையை பதித்துள்ளார். இவரது படங்கள் வெளியானாலே தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ் ஃபுல்லாகி விடும். ரசிகர்களுக்கும், தியேட்டர் ஓனர்களுக்கும் செம ட்ரீட்டாக அமையும்.
முதலில் கோச்சடையான்
ஆனால், இவர், தனது மகள்களுக்காக நடித்த படங்கள் எல்லாம் இவரது மார்க்கெட்டை சரித்தே வந்தன. முதலில் உலகளவில் ஹிட் ஆன அவதார் படம் போல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படம் எடுக்கப்போவதாகவும், இதில் தனது தந்தை நடிக்க உள்ளார் எனவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.
அந்தப் படத்தின் கதை நன்றாக இருந்தாலும், படத்தின் காட்சிகளை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தைகளுக்கு காட்டும் அனிமேஷன் படம் போல் இருந்ததாக பலரும் விமர்சித்து வந்தனர். இதனால், இன்று வரை அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.
அடுத்தது லால் சலாம்
இதற்கிடையில், தன் மார்கெட்டை ஸ்டார் ஹீரோவாகவே தக்க வைத்திருந்த ரஜினிகாந்த்தை வைத்து, அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். முதலில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என அறிவித்த அவர், பின் படத்தின் ஹைப்பிற்காக அவரது காட்சிகளின் நேரத்தை அதிகமாக்கினார்.
விளையாட்டை மையமாக வைத்தும், அதை சுற்றி நடக்கும் மோதலையும் இப்படத்தின் வாயிலாக வெளிப்படுத்த உள்ளதாக ஐஸ்வர்யா கூறிய நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
அதிகரித்த எதிர்பார்ப்பு
விஷ்ணு விஷால், விக்ராந்த் என இரண்டு நடிகர்களும் கிரிக்கெட் மீது பிரியம் கொண்டவர் என்பதால், இளைஞர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது. அத்துடன் படத்தின் பட்ஜெட்டும் 100 கோடி ரூபாய், இதுவரை பார்க்காத வித்தியாசமான கெட்டப்பில் ரஜினி என பல்வேறு எதிர்பார்ப்புகள் படத்தின் மீது இருந்தது.
ஆனால், படம் வெளியான பின், பாசிட்டிவ் விமர்சனங்களை விட நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகளவு வந்தன. படத்தின் கதை மக்களுக்கு ஒட்டவில்லை என்றும், படத்தின் கேமியோ ரோலில் நடிப்பவரே சுமார் அரை மணி நேரத்திற்கு வருகிறார் என்றும் விமர்சித்தனர்.
தொலைந்த ஹார்ட் டிஸ்க்
இதைக் கேட்ட ஐஸ்வர்யா, படத்தின் முக்கியமான ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. அதனால், பல முக்கிய காட்சிகளை படத்தில் இணைக்க முடியவில்லை எனக் கூறினார். இது பல்வேறு விதமாக ட்ரோல் செய்யப்பட்டது. இவர் பேசிய வார்த்தைகள் ஓடிடி தளங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தள்ளிப்போன ஓடிடி ரிலீஸ்
அதனால், இப்படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் மற்றும் சன்நெஸ்ட் ஆகிய 2 ஓடிடி தளங்களும் ஹார்ட் டிஸ்க் கிடைத்தவுடன் படத்தை சரியாக முடித்த பின் படத்தை வெளியிடலாம் எனக் கூறினர்.
இதனால், படம் வெளியாகி 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்றுவரை லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாகவில்லை. நிலைமை இப்படி இருக்க, லால் சலாம் படத்தின் ஹிந்தி பதிப்பை ஓடிடியில் வெளியிடும் முன்னே டிவியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
ஹிந்தி சேனலில் நேரடி ரிலீஸ்
அதவாது. லால் சலாம் படத்தின் ஹிந்தி பதிப்பு வரும் டிசம்பர் 14ம் தேதி இரவு 9 மணிக்கு ஜீ சினிமா சேனலிலும், டிசம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு ஜீ டிவியிலும் நேரடியாக வெளியிடப்படுகிறதாம். இதனால், ரஜினியின் படம் ஓடிடிக்கு வராமல் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாவது இதுதான் முதல்முறை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிக்கு வந்த சோதனை
இருந்தபோதிலும், மற்ற மொழிகளில் லால் சலாம் படம் எப்போது ரிலீஸ் ஆகும், அதன் ஓடிடி ரிலீஸ் எப்போதுவரும் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதன்காரணமாக சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினி அவரது மகள்களால் இன்னும் எவ்வளவு கிண்டலுக்கு உள்ளாகப் போகிறாரோ எனத் தெரிவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்