பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்

பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்

Marimuthu M HT Tamil
Nov 07, 2024 08:49 AM IST

- பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்காக பேசியுள்ளார்.

பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்
பிரயோஜனம் இல்ல.. தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது.. கஷ்டம்: விஜய்யின் கட்சி குறித்து ரஜினியின் அண்ணன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

மும்முர உறுப்பினர் சேர்க்கையில் தமிழக வெற்றிக் கழகம்:

தொடங்கிய மூன்றே நாட்களில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.

சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் செயல்திட்டங்கள் குறித்துப் பேசிய பேச்சு வைரல் ஆனது.

வைரல் ஆன விஜய் பேச்சு:

குறிப்பாக கடவுள் மறுப்பு நீங்கலான பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவது, குடும்ப ஆட்சியை ஒழிப்பது என்று திமுகவை தாக்கிப் பேசியது, திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் எனப் பேசியது, கூட்டணியில் பங்கு வகிக்கும் பிற கட்சியினருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிப்பது என நடிகர் விஜய் பேசிய அனைத்தும் வைரல் ஆனது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் மட்டும் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட், தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்யால் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது என்றார்.

விஜய்யால் தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது - ரஜினியின் அண்ணன்

மதுரையில் இதுதொடர்பாக நடிகர் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் அளித்த பேட்டியில், ‘’ வரட்டும். வரட்டும். கமல்ஹாசன் மாதிரி அவங்களும் முயற்சி பண்ணட்டுமே. அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு. அதனால் அவங்க பண்ணட்டும். மக்களுக்குப் பண்ணனும்னு ஆசைப்பட்டுருக்கார் விஜய் அவ்வளவு தான். அவர் கட்சி ஆரம்பிச்சு பிரயோஜனம் இல்லை. அதனால் ஒன்னும் சாதிக்கமுடியாது. அரசியலுக்கு வந்திருக்கார். சரி முயற்சி பண்ணட்டும். மனசில் என்ன நினைச்சு அரசியலுக்கு விஜய் வந்திருக்கார்ன்னு தெரியாது.

நானும் அரசியலுக்கு வந்து பண்ணனும்னு நினைக்கிறார். வந்தபின் என்னப் பண்றார்னு தெரியல. முடியாது. தமிழ்நாட்டில் முடியாது. விஜய்னால முடியாதுங்க. இப்போ, அவர் ஆசைப்பட்டிருக்கார் அவ்வளவு தான். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். என்னப் பண்றார்னு பார்க்கலாம். முயற்சி பண்ணட்டும்ங்க. ஆனால், ஜெயிக்கமுடியாது. கஷ்டம்’’ என பேசி முடித்தார். நடிகர் ரஜினியின் அண்ணனின் இந்தப் பேச்சால், நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.