ரஜினியின் பர்த்டே ட்ரீட்.. சாய்பல்லவி வார்னிங்.. பிரபல இயக்குநர் விவாகரத்து! தமிழ் டாப் சினிமா செய்திகள் இன்று
ரஜினியின் பர்த்டே ட்ரீட், சாய்பல்லவி வார்னிங், அரசாங்க ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன், பிரபல இயக்குநர் விவாகரத்து உள்பட தமிழ் டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டும் அவர் தொடர்பான கிளாசிக் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இன்று ட்ரெண்டாகின. தமிழில் சூது கவ்வும், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் ஆகிய படங்கள் நாளை வெளியாகி இருக்கின்றன. இதற்கிடையே டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
திருத்தணியில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
நடிகர் சிவகார்த்திகேயன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன், மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை, விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரஜினி பர்த்டே ட்ரீட்டாக வெளியான சிகிடு வைப் பாடல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து ரசிகர்களுக்கு பர்ட்டே ட்ரீட்டாக வைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் டி. ராஜேந்தர் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு ரஜினியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் பாடலை பலரும் வைப் செய்து வருகிறார்கள்.