Vanakkatukuriya Kathaliye: இண்ட்ரோ பாடலுடன் அறிமுக காட்சி..! ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanakkatukuriya Kathaliye: இண்ட்ரோ பாடலுடன் அறிமுக காட்சி..! ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியம்

Vanakkatukuriya Kathaliye: இண்ட்ரோ பாடலுடன் அறிமுக காட்சி..! ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 14, 2024 07:30 AM IST

ஜினிக்கு இண்ட்ரோ பாடலுடன் அறிமுக காட்சி வைக்கும் ட்ரெண்டுக்கு வழி அமைத்து கொடுத்தது இந்த படம். ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியமாகவும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது.

ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியம்
ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியம்

படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கியிருப்பார். ஆரூர்தாஸ் வசனங்கள் எழுதியிருப்பார்.

விஜயகுமார், ஜெயசித்ரா, எஸ்.வி. சுப்பையா, மனோரமா, அசோகன், தேங்காய் சீனிவாசன், ஏ.ஆர்.எஸ்., உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

இரட்டை வேடத்தில் ஸ்ரீதேவி

இரட்டை பிறவிகளான ஸ்ரீதேவி குழந்தையாக பிறக்கும்போது சூழ்நிலை காரணமாக பிரிகிறார்கள். ஒருவர் இந்துவாகவும் கிராமத்திலும், இன்னொருவர் கிறிஸ்தவராக நகரத்திலும் வளர்கிறார்கள்.

கிராமத்தில் வளரும் ஸ்ரீதேவி விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டத்தில் ஈஎஸ்பி எனப்படும் எதிர்காலத்தை கணிக்கும் அபூர்வ சக்தி பெறுகிறார். நகரத்தில் வாழும் ஸ்ரீதேவி, தந்தையும் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி ரஜினியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

ரஜினியுடன் வாழ்ந்து வரும் ஸ்ரீதேவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மறுபுறம் கிராமத்து ஸ்ரீதேவி சொன்னபடி அவரது அக்காவின் கணவர் விபத்தில் இறந்துவிடுகிறார். இதனால் ஆத்திரத்தில் அவரை வீட்டை விட்டு துறத்துகின்றனர்.

இதற்கிடையே இருவருக்கும் தங்களது பிறப்பின் ரகசியம் தெரிய வருகிறது. இறப்பதற்கு முன் தனது குடும்பத்தை பார்க்க விரும்பி சொந்த ஊருக்கு செல்கிறார் நகரத்து ஸ்ரீதேவி.

பாதி வழியிலேயே தனது சகோதரியான இன்னொரு ஸ்ரீதேவியை பார்க்கிறார். நகரத்து ஸ்ரீதேவி தனது தந்தையை பார்த்தவுடன் இறக்கிறார். வீட்டை விட்டு ஓடி வந்த கிராமத்து ஸ்ரீதேவி, ரஜினியுடன் அடைக்கலம் ஆகிறார். இந்த நேரத்தில் அவரை காதலித்த விஜயகுமாரிடம் தங்கை போன்று நடிக்கிறார்.

இறுதியில் ஒரு நாடகம் அரங்கேற்றி ஸ்ரீதேவியை காதலித்த விஜயகுமாரை அவரிடம் சேர்த்து வைக்கும் ரஜினி விடைபெறுவதோடு படம் முடியும்.

என்னதான் ரஜினி ஹீரோவாக இருந்தாலும் படத்தின் கதை முழுவதும் இரட்டை பிறவிகளாக தோன்று ஸ்ரீதேவிகளை சுற்றியே நகரும். கிராமத்து கதாபாத்திரத்தில் சாந்தமாகவும், குடும்பபாங்காகவும், நகரத்து பெண் கேரக்டரில் மாடர்ன் உடை அணிந்து, ஸ்டைலான பேச்சு எனவும் நடிப்பில் வெரைட்டை காட்டி படையல் செய்திருப்பார் ஸ்ரீதேவி.

ரஜினிகாந்த் பிஸியான நடிகராக உருவெடுத்த போது இந்த படத்தில் நடித்திருந்தார். தனக்கே உரிய ஸ்டைலிஷ் பாடிலாங்குவேஜ் சில காட்சிகளில் வெளிப்படுத்தியிருப்பார். ஆனாலும் இவரை விட ஸ்ரீதேவிக்கு தான் நடிப்பதற்கான ஸ்கோப் அதிகமாக இருந்தது.

ரஜினியின் அறிமுக பாடல் ட்ரெண்ட்

இந்த படத்தில் பாடல் ஒன்றில் ரஜினி அறிமுகமாகும் காட்சி இடம்பிடித்திருக்கும். ரஜினிக்கு இண்ட்ரோ பாடலுடன் அறிமுக காட்சி வைக்கும் ட்ரெண்டுக்கு வழி அமைத்து கொடுத்தது இந்த படம் தான்.

வாலி பாடல் வரிகளில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாகின. படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு பேசப்பட்டது.

ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி காம்போவில் சிறந்த காதல் காவியமாகவும், ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்த படமாகவும் இருந்து வரும் வணக்கத்துக்குரிய காதலியே படம் வெளியாகி இன்றுடன் 46 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.