38 Years of Mr. Bharat: “என்னம்மா கண்ணு செளக்கியமா?” நடிப்பில் அதகளம் செய்த ரஜினிகாந்த் - சத்யராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  38 Years Of Mr. Bharat: “என்னம்மா கண்ணு செளக்கியமா?” நடிப்பில் அதகளம் செய்த ரஜினிகாந்த் - சத்யராஜ்

38 Years of Mr. Bharat: “என்னம்மா கண்ணு செளக்கியமா?” நடிப்பில் அதகளம் செய்த ரஜினிகாந்த் - சத்யராஜ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 10, 2024 04:50 AM IST

ரீமேக்காக இருந்தாலும் மிஸ்டர்.பாரத் படத்தில் ரஜினி, சத்யராஜ் போட்டு போட்டு நடிப்பு திறமையை வெளிகாட்டியிருப்பார்கள். இதன் காரணமாக படம் வெளியான ஆண்டில் சிறந்த மசாலா திரைப்படங்களில் ஒன்றாக இது அமைந்தது.

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த் - சத்யராஜ்
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த் - சத்யராஜ்

ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் சத்யராஜ், அம்பிகா, ஷ்ரத்தா, எஸ்வி சேகர், ரகுவரன், கவுண்டமணி, விசு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரஜினியை விட வயது குறைவான சத்யராஜ் இந்த படத்தில் அவரது அப்பவாக நடித்திருப்பார்.

சத்யராஜ் ஏமாற்றப்படும் ரஜினியின் தாயாக ஷரத்தா இறப்புக்கு நீதி வேண்டியும், சத்யராஜ்தான் தனது தந்தை என நிருபிக்க ரஜினி போராடுவதும் தான் படத்தின் ஒன்லைன். படம் முழுவதுமே பெரும்பாலான காட்சிகள் ரஜினி - சத்யராஜ் இடையிலான ஃபேஸ் ஆஃப் ஆகவே இருந்து வரும். இருவரும் மாறி மாறி சீண்டிக்கொள்வது, யார் பெரியவர், புத்திசாலி என்கிற ஈகோவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் திரைக்கதையில் ரஜினி, சத்யராஜ் என இருவரும் அதகளம் செய்திருப்பார்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால் இந்த படமே இவர்கள் இருவரின் டூ மென் ஷோவாகவே அமைந்திருக்கும். வழக்கமாக ரஜினி பேசும் பஞ்ச வசனங்கள் தனித்துவம் பெற்றவையாகவும் ரசிகர்களை கவரும் விதமாகவும் இருக்கும். ஆனால் இந்த படத்தில் சத்யராஜ் பேசும் என்னம்மா கண்ணு என்ற வசனம் மிகவும் பிரபலமானது. இதே வசனத்தை பஞ்சாக பேசி ரஜினியும் தனது ஸ்டைலில் கலக்கியிருப்பார். இந்த ஒற்றை வசனமே படம் ஹிட்டாகவும் முக்கிய பங்கு வகித்தது.

படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். வைரமுத்து பாடல் வரிகளில் சத்யராஜ் குரலுக்கு மலேசியா வாசுதேவன், ரஜினி குரலுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாட என்னம்மா கண்ணு என்ற பாடலும் உலகளவில் பேமஸ் ஆனது.

இந்த பாடலும் அப்பா சத்யராஜ், மகன் ரஜினிக்கு இருக்கும் ஈகோ மோதாலாக உருவாக்கப்பட்டிருப்பதோடு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் படமாக்கியிருப்பார்கள். பாடலில் ஒலிக்கும் ட்ரம் பீட் நம்மை அறியாமலேயே ஒரு வித வைப்பை உருவாக்கி தாளம் போட வைக்கும்.

1986ஆம் பொங்கல் வெளியீடாக மிஸ்டர். பாரத் படம் வெளியானது. ரஜினியின் ரீமேக் படங்களிலும், எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படங்களிலும் மற்றொரு சூப்பர் ஹிட்டாக இந்த படம் இருந்து வருகிறது. ரஜினியின் நடிப்பு திறமை, ஸ்டைல் போன்றவற்றை வெளிக்காட்டிய மிஸ்டர். பாரத் வெளியாகி இன்றுடன் 38 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.