தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajini Vs Vijay: Film Critic Blue Sattai Maran Questions About Actor Rajinikanth's Speech About Actor Vijay

Rajini vs vijay: ’காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான்’ ரஜினியை விளாசும் ப்ளூசட்டை!

Kathiravan V HT Tamil
Jan 27, 2024 08:53 AM IST

“லால்சலாம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் காக்கா- கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசி இருந்தார்”

ரஜினிகாந்த் - விஜய் - ப்ளூ சட்டை மாறன்
ரஜினிகாந்த் - விஜய் - ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து பேசிய அவர், ஜெயிலர் இசைவெளியிட்டு விழாவின் போது தாம் சொன்ன காக்கா- கழுகு கதையை விஜயை தாக்கி பேசியதாகசிலர் தவறாக நினைத்துக் கொண்டதாக கூறினார். இத சம்பவம் தமக்கு மிகவும் வருத்தம் அளித்ததாக கூறிய ரஜினி, எப்போதுமே தாம் விஜயை போட்டியாக நினைத்தது இல்லை என்றும், அப்படி நினைத்தால் அது தமக்கு மரியாதை தராது என கூறினார்.

அதே போல் தம்மை நடிகர் விஜய் போட்டியாக நினைத்தால் அது விஜய்க்கு மரியாதையாக இருக்காது என்ற ரஜினி, நடிகர் விஜய் அரசியல் மற்றும் சமூக பணிகளுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக வாழ்த்துகள் என்றும் கூறினார்.

விஜய் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் காக்கா- கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.

அவரது பேச்சுக்குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன், “காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான்.

பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு புலம்புனதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா.. ரிலீஸ் டைம்ல மத்த படங்கள் போட்டி போட தியேட்டர் கெடச்சாத்தான? அப்படி ஒரு வாய்ப்பு வந்தப்ப பேட்ட வசூலை விஸ்வாசம் போட்டு தள்ளுனது எல்லாம் மறக்க முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார். ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.