ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி தான் சிறப்பு விருந்தினாரா? இணையத்தில் வெளியாகும் தகவல்?
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து இருக்கும் படம் ரெட்ரோ, இப்படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளலாம் என எதிறப்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்ற டாப் ஹீரோக்களின் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கூட வநான்கான் பட விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டார். இந்த வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்விற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் கம்பேக்
நடிகர் சூர்யாவிற்கு கடந்த பல வருடங்களாக படங்கள் ஏதும் வெளியாகமல் இருந்து சமீபத்தில் தான் கங்குவா வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எதிர்மாறாக அனைத்து தரப்பிலும் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிறப்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப் போகியுள்ளது.
இந்த ரெட்ரோ படம் சூர்யாவிற்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதன் காரணமாக கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திற்காகவே இந்த படம் சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இசை வெளியீட்டு விழா
ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அடுத்து அடுத்து வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டு இருக்கின்றன. அதிலும் கனிமா பாடல் இன்ஸ்டா முழுவதும் நிரம்பி வழிகிறது என்றே கூறலாம். இந்த நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது. ஆனால் தற்போது வரை படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்ரோ படத்தின் டீசருக்கும் நேர்மறையான விருப்பங்களே வந்த வண்ணம் உள்ளன.
ரஜினி சிறப்பு விருந்தினரா?
நடிகர் ரஜினி காந்த் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கோவையில் உள்ளார். ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழாவிற்காக படக் குழு ரஜினியை சென்று சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருப்பதால் ரஜினி வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனி வரும் நாட்களில் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிறப்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்/ பொருள்/ உள்ளடக்கம் என அனைத்தும் வெவ்வேறு ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இவை உண்மையென நாங்கள் ஒரு போதும் கூற வில்லை. இது வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதனை பயன்படுத்திக் கொள்வது பயனாளரின் தனிப்பட்டநோக்கமாகும்.

டாபிக்ஸ்