தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajini House Next Door Old Lady Is Tensed Due To The Noise Made By Rajini Fans And Bluesattai Maran Also Criticized

ரஜினி வீட்டின்முன் ரசிகர்கள் போட்ட சத்தம்; டென்ஷனான பக்கத்துவீட்டு மூதாட்டி - 'சுருக்’ என கேள்விகேட்ட ப்ளூ சட்டை மாறன்

Marimuthu M HT Tamil
Jan 15, 2024 06:08 PM IST

ரஜினியின் வீட்டின் முன் கூடிய கூட்டத்தால் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் டென்ஷன் ஆனதால் பரபரப்பு ஆனது.

ரஜினியின் ரசிகர்கள்  போட்ட சத்தத்தால் ரஜினியின் பக்கத்து வீட்டு மூதாட்டி கோபம்
ரஜினியின் ரசிகர்கள் போட்ட சத்தத்தால் ரஜினியின் பக்கத்து வீட்டு மூதாட்டி கோபம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், நடிகர் ரஜினிகாந்த். அவரது இல்லம் போயஸ்கார்டன் பகுதியில் இருக்கிறது. இப்பகுதியில் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடும் இருந்தது. எனவே, வி.வி.ஐ.பிக்கள் வசிக்கும் பகுதியாகவே போயஸ் கார்டன் திகழ்ந்து வந்தது. இந்நிலையில் ரஜினியின் ரசிகர்கள், ஒவ்வொரு பண்டிகையின்போதும் அவரது வீட்டுக்கு முன்பு ஒன்றுகூடுவர். அப்போது வெளியில் வரும் ரஜினியிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு கிளம்புவர். அப்படி, இன்றைக்கு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, அவரைப் பார்க்க அவரது இல்லத்துக்கு முன் ரசிகர்கள் ஒன்று கூடினர்.

அப்போது ‘தலைவா, தலைவா’என்று ஆர்ப்பரித்தனர். இந்நிலையில் போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் மூதாட்டி, இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்து வெளியில் வந்து தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். அப்போது அந்த மூதாட்டி கூறியதாவது, 'ஒவ்வொரு பண்டிகையின்போதும் எங்கள் வீட்டுக்கு முன் சத்தம் கேட்கிறது. ரசிகர்கள் என்ற பெயரில் வீட்டுக்கு முன்பு வந்து நின்று கத்தி கூச்சலிடுவதா?. நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.

நாங்கள் பிரார்த்தனை செய்யமுடியவில்லை. நாங்களும் வரி கட்டுகிறோம். எல்லாம் செய்கிறோம். இப்படி அனைத்து நல்ல நாட்களிலும் கூட்டம் கூடி, சத்தம் போட்டால் என்ன செய்வது? ரஜினி தன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே விடலாம்’என்றார்.

இதுகுறித்த காணொலியைப் பகிர்ந்த திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ''ரஜினி பிறந்தநாள், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என அடிக்கடி போயஸ் கார்டன் வந்து கோஷம் போடும் ரசிகர்கள். பக்கத்துவீட்டு பெண்மணி ஆவேசம்’’ எனத் தலைப்பிட்டு பதிந்துள்ளார். மேலும் அவர்,'' ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.