Rajini Love Story: 'என் காதலி இல்லைனா நான் இல்லை' - நடிகர் தேவனிடம் கண்ணீர்விட்ட ரஜினி
தனது முதல் காதல் குறித்து நடிகர் தேவனிடம் ரஜினி கண்ணீர்விட்டு பேசிய தகவல் வைரல் ஆகிவருகிறது.
நான்கு ஆண்டுகளுக்குமுன் நடிகர் தேவன், தனது ’பாட்ஷா’ படத்தில் படித்த அனுபவங்களைப் பற்றி, இந்தியா கிளிட்ஸ் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் நடிகர் ரஜினிகாந்தின் முதல் காதல் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும்; ரஜினி தனது முதல் காதலி குறித்து தன்னிடம் பகிர்ந்துள்ளதாகவும் ஒரு தகவலைக் கூறியுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில், ‘’பாட்ஷா படத்தில் நடிக்க கமிட் ஆனப்போ தான் ரஜினி சாரை விஜயவாஹினி ஸ்டுடியோவில் வைச்சு முதன்முதலில் சந்திச்சேன். அப்போது ஆனஸ்ட்ராஜ் படத்தில் என் நடிப்பைப் பார்த்த அவர் அதுகுறித்து மனம்திறந்து பாராட்டிப் பேசினார். நைட் ரூமில் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னார்.
அப்போது ‘உங்கள் ஃபர்ஸ்ட் லவ் பத்தி சொல்லமுடியுமா?’ அப்படின்னு என்னிடம் கேட்டார். அது எல்லாருக்குமே இருக்குமே. அதைப் பத்தி சொல்லிட்டே இருக்கும்போது, ரஜினி சார் கொஞ்சம் டல்லாக ஆரம்பிச்சார்.
உடனே, நான் சார் உங்களுக்கு ஃபர்ஸ்ட் லவ் இருக்கானு கேட்டேன். இருக்குன்னு சொன்னார். அப்ப, அதைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னேன். அப்படியே சொல்ல ஆரம்பிச்சார்.
பெங்களூருவில் ரஜினி சார், கண்டக்டராகப் பணியாற்றிய நாட்களில் இது நடந்திருக்கு. அப்போது டாக்டர் நிர்மலா என்ற பெண்ணை ரஜினி சார் விரும்பியிருக்கிறார். இருவருக்கும் பேருந்தில்தான் சந்திப்பு நடந்திருக்கு. ரஜினி சார் பணிபுரியும் பேருந்தில் நிர்மலா தொடர்ந்து பயணம் செஞ்சிருக்காங்க. இறுதியில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு நாள் ரஜினி நிர்மலாவை தனது மேடை நாடகம் குறித்துச் சொல்லி, அதனைப் பார்க்க அழைத்துள்ளார். நிகழ்ச்சியைப் பார்த்த நிர்மலா, ரஜினியின் நடிப்பில் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
பின்னர் ரஜினியின் சார்பில் சென்னையில் உள்ள அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு, ரஜினிக்கே தெரியாமல் விண்ணப்பம் செய்திருக்கிறார், நிர்மலா. ஒரு நாள் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருந்து, நடிப்புப் பயிற்சி எடுக்கணும்னு ரஜினி சாருடைய பெங்களூரு அட்ரஸ்க்கு ஒரு கார்டு வந்திருக்கு. இதை எடுத்துட்டுப்போய் தனது காதலிகிட்ட சொல்லியிருக்கார், ரஜினி சார். அதை அப்ளை பண்ணுனது தான் தான், அப்படினு அவங்க சொல்லியிருக்காங்க. உடனே அங்கே போக தன்னிடம் பணம் இல்லை என்று ரஜினி சார் சொல்லி வருந்தியிருக்கிறார்.
அதை உணர்ந்த அந்தப் பெண், தனது கையில் இருந்த பணத்தைக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மீண்டும் பெங்களூரு வந்த ரஜினி சார், நிர்மலாவை பார்க்கப் போயிருக்கிறார். அங்கு ஒரு அதிர்ச்சியாக, நிர்மலாவும் அவரது குடும்பத்தினரும் தெரியாத இடத்துக்குப் போயிட்டதாக, அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இது ரஜினி சாரை நிலைகுலைய வைத்துள்ளது. தன் காதலி இல்லைன்னா, தான் இப்படி இருந்திருக்க முடியாது கண் கலங்கினார். அந்த வலியிலிருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக ரஜினி சார் புலம்பியிருக்கிறார்’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்