கிழித்து தொங்கவிடப்பட்ட ட்ரெண்டிங் அக்காக்கள்.. பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் கொடூரம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கிழித்து தொங்கவிடப்பட்ட ட்ரெண்டிங் அக்காக்கள்.. பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் கொடூரம்..

கிழித்து தொங்கவிடப்பட்ட ட்ரெண்டிங் அக்காக்கள்.. பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் கொடூரம்..

Malavica Natarajan HT Tamil
Jan 01, 2025 12:00 PM IST

பணம் சம்பாதிக்கும் நோக்கில் சில பெண்கள் செய்யும் வேலை, பல ஏதும் அறியாத பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என ட்ரெண்டிங் அக்காக்களை ராஜேஸ்வரி பிரியா கண்டித்துள்ளார்.

கிழித்து தொங்கவிடப்பட்ட ட்ரெண்டிங் அக்காக்கள்.. பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் கொடூரம்..
கிழித்து தொங்கவிடப்பட்ட ட்ரெண்டிங் அக்காக்கள்.. பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடும் கொடூரம்..

ட்ரெண்டிங் அக்காக்கள்

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் தங்களின் உடல் உறுப்புகளை தான் பிரபலமாகவதற்கு பயன்படுத்துகின்றனர். கவர்ச்சியும் ஆபாச பேச்சுகளும் இருந்தால் தான் பிரபலமாவது மட்டும் இல்லாமல் பணம் சம்பாதிக்கவும் முடியம் என்பதை அறிந்து பல வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

அதற்கு உதாரணம் தான் 2024ம் ஆண்டு அதிகளவில் பேசப்பட்ட அக்காக்கள், டைலர் அக்கா, பலூன் அக்கா, யோகா அக்கா, கோடிங் அக்கா, டிவோஷனல் அக்கா, பீரோ அக்கா என இவர்களின் அக்கா பட்டியல் நீண்டு கொண்டே போனது. அத்துடன் இவர்களின் வீடியோவும் நீண்டுகொண்டே சென்று பலதாக்கங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேய்வரி பிரியா ஏரோவுட்ஸ் தமிழ் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சட்டம் தான் திருத்தனும்

அந்தப் பேட்டியில், "இன்னைக்கு சமூகத்த சீரழிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல குறிப்பா இந்த பெண்கள் இருக்காங்க. திரைப்படத்துல ஆபாச காட்சிகள் எவ்ளோவோ இருக்கு. அந்த காட்சிகள்ல நடிக்கும் நடிகைகளின் தகுதி தான் இது. நான் என்ன வேண்டுமென்றாலும் பேசுவேன். எந்த உறுப்பை பற்றியும் வெளிப்படையாக பேசுவேன்னு இருக்க பெண்களை சட்டம் தான் திருத்தனும்.

ரீச் கிடைக்க நடக்கும் போராட்டம்

இந்த மாதிரி வீடியோக்கள் எல்லாம் சினிமா ஹீரோயின்ஸ் கூட பண்றது இல்ல. இவங்கள எல்லாம் பாக்குறப்போ நடிகைங்க எல்லாம் எவ்ளவோ பரவாயில்லன்னு தோணுது.

இந்த வீடியோக்கள் மூலமா ரொம்ப அதிகமாக அவங்களுக்கு மக்கள் கிட்ட ரீச் கிடைக்குது. பணம் சம்பாதிக்கவும் இது ஒரு சிம்பிளான வழி. இது எல்லாம் தடுக்கப்பட வேண்டியது.

மாணவர்கள் எல்லாம் தவறான வழக்கு போக வாய்ப்பிருக்கு. ஆனா, இவங்க எல்லாம் ஆபாசப் படங்கள் போன்ற விஷயங்களை மிகைப்படுத்தி இவர்களோட வீடியோக்கள் எல்லாம் எதுவும் இல்லாதது போல காட்டிக்குறாங்க.

யார பத்தியும் கவல இல்லை

படிக்கக் கூடிய பல்கலைகழகம் போன்ற இடங்கள்ல, சின்ன சின்ன கிராமங்கள்ல கிணத்துலயும், காட்டுப் பகுதிகளிலும் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சடலங்களா கிடைக்குற சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு.

இதை எல்லாம் எப்படி சரிசெய்ய போறோம்ன்னு நாம நெனச்சிட்டு இருக்கும் போது, யார் மனசையும் சஞ்சலப்படுத்தலாம். எப்படி வேணாலும் காசு சம்பாதிக்கலாம்ன்ற நெனப்போட சில பெண்கள் இருக்காங்க. ஆனா இந்த வீடியோக்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களை பாதிக்கிறது இல்ல. ஆனா, அந்த வீடியோக்களை வச்சு பல பெண்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுறாங்க.

என்ன மண்ணாங்கட்டிக்கு சைபர் கிரைம்

நாம எதப் பாக்குறோமோ அத அளவுக்கு அதிகமா போன் எல்லாம் அள்ளிக் குடுக்குது. நான் இதுபோன்ற விஷயங்களுக்கு ஏன் குரல் கொடுக்கலன்னா இப்படி ஒன்னு நடக்குறதே எனக்கு தெரியாது.

இதை எல்லாம் கட்டுப்படுத்த தான் போலிசும், சைபர் கிரைமும் இருக்கு. ஆனா அவங்களே இதை எல்லாம் கண்டுகொள்ளாம இருந்த அப்புறம் என்ன மண்ணாங்கட்டித்த சைபர் கிரைம்.

இங்க ஆன்மீகத்தை பயன்படுத்துறவங்களும், ஆபாசத்த பயன்படுத்துறவங்களம் தங்கள நல்லவங்களா காட்டசில காரணங்கள வச்சிருக்காங்க.

கொடூர குணம் கொண்ட பெண்கள்

இவங்க எல்லாம் வாழவே தகுதி இல்லாதவங்க. உழைப்பதற்கு வக்கு இல்லாமல் இந்த மாதிரி வீடியோ போடுறாங்க. இந்த மாதிரி கொடூர குணம் கொண்ட பெண்கள் மீது வழக்கு பாயனும்.

அதுமட்டுமல்லாம இங்க பலபேர் தனிப்பட்ட முறையில் பேச இவ்வளவு கட்டணம்ன்னு ஓபனாவே பேசி சம்பாதிக்குறாங்க. இது ரொம்ப தவறான முன் உதாரணம். இது மூலம் வருமாணம் வருதுன்னு தெரிஞ்சா எத்தனையோ பெண்கள் இந்த வழியில விழ வாய்பு இருக்கு.

தமிழ் மொழிக்கே அசிங்கம்

நமக்கு கிடைக்குற சுதந்திரத்த சரியா பயன்படுத்தி திறனை வளர்த்துக் கொள்ளனும். பெற்றோர்கள் தங்களின் பெண்கள் சரியாக இருக்கிறார்களா என்பதை பார்க்கனும். இதுபோன்ற பெண்கள் தமிழ் மொழிக்கே அசிங்கமானவர்கள். நிச்சயம் இவர்கள் பற்றி போலீசில் புகாரளிப்பேன்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.