Rajakumari:கருணாநிதியின் முதல் மை;ஹீரோ MGR என்ட்ரி-ராட்சதர்கள் தந்த ராஜகுமாரி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajakumari:கருணாநிதியின் முதல் மை;ஹீரோ Mgr என்ட்ரி-ராட்சதர்கள் தந்த ராஜகுமாரி!

Rajakumari:கருணாநிதியின் முதல் மை;ஹீரோ MGR என்ட்ரி-ராட்சதர்கள் தந்த ராஜகுமாரி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 11, 2023 06:15 AM IST

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி திரைப்படம் வெளியாகி இன்றோடு 76 வருடங்கள் ஆகியுள்ளன.

ராஜகுமாரி திரைப்படம்
ராஜகுமாரி திரைப்படம்

காதலை தினந்தோறும் இருவரும் வளர்த்தெடுக்கிறார்கள். ஒருக்கட்டத்தில் சுகுமாறனின் அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிய வர, ராஜகுமாரியை கைவிட சொல்கிறாள். அம்மாவின் பேச்சை அப்படியே கேட்கும் சுகுமாறன் ராஜகுமாரியை கைவிட துணிகிறான். 

ராஜகுமாரியின் நினைவில் வாடிய ஆலகாலன் அவளை எப்படியும் தன்வசப்படுத்த வேண்டும் என்று நினைத்து ஒரு மந்திரவாதியை அணுகுகிறான். ஆனால் அந்த மந்திரவாதியோ ராஜகுமாரியை கவர்ந்து சென்று விடுகிறான். 

ராஜகுமாரியை மீட்பவருக்கு அவளையே பரிசாகத் தரப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விபடும் சுகுமாறன் அம்மாவின் அனுமதியோடு ராஜகுமாரியை மீட்டெடுக்க கிளம்புகிறான். 

சர்ப்பத் தீவை அடைந்த சுகுமாருக்கு பாப்பாட்டியின் பிள்ளைகள் பகு (நம்பியார்), பகுனி (எம். எஸ். சிவபாக்கியம்) ஆகியோரின் ஆதரவு கிடைக்கிறது. அவர்களின் துணை கொண்டு அவன் ராஜகுமாரியை மீட்டானா?  இல்லையா என்பதே படத்தின் கதை!

1947 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரி திரைப்படத்தை ஏ.எஸ். ஏ. சாமி இயக்கி இருந்தார். இதில் இரண்டு சம்பவங்கள் முக்கியமானவை. ஒன்று இந்த திரைப்படம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம். இன்னொன்று கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படம். அப்போது அவருக்கு 23 வயது என தகவல்கள் சொல்லுகின்றன

உடுமலை நாராயணகவி, பாடல்களை எழுத எஸ். எம். சுப்பையா நாயுடு படத்திற்கு இசையமைத்திருந்தார்.படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்று இருந்தன. எம். ஜி. இராமச்சந்திரனுக்காக எம். எம். மாரியப்பா பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.

இந்த திரைப்படம் குறித்து தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கருணாநிதி, “ஓராண்டு காலம் ‘குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. அந்த அழைப்பில் திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. 

அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.