தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arrahman: வேலைக் காரருடன் மகள் காதல்?.. சடாரென்று திருமணம் செய்து வைத்த ரஹ்மான்! - நடந்தது என்ன?

ARRahman: வேலைக் காரருடன் மகள் காதல்?.. சடாரென்று திருமணம் செய்து வைத்த ரஹ்மான்! - நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 12, 2024 08:43 AM IST

இது வேண்டுமென்று ரஹ் மானை குறை சொல்வதற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு. காரணம் என்னவென்றால், ரஹ் மானை நீங்கள் வேறு எந்த வழியிலும் குற்றவாளி கூண்டில் ஏற்றி விட முடியாது

ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான்!

ட்ரெண்டிங் செய்திகள்

கம்பீரன் பேசும் போது, "ஏ ஆர் ரஹ்மான் அவர்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். தான் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று அவர் என்றைக்குமே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது இல்லை. தன்னுடைய மகளை தன்னிடம் உதவியாளராக இருந்த ஒரு சவுண்ட் இன்ஜினியருக்கு தான் அவர் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 

கதிஜாவினுடைய திருமணம் ஏ ஆர் ரஹ்மான் உடைய தற்போதைய அந்தஸ்துக்கான திருமணமா என்று நீங்கள் கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். 

ஏ ஆர் ரஹ்மான் அந்த பையனுடைய கேரக்டரை பார்த்தார். மிகவும் நல்ல கேரக்டர் என்பது என்று தெரிந்தது. உடனே கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து மிகவும் எளிமையான முறையில் அந்த கல்யாணத்தை நடத்தினார். " என்று பேசினார் 

சுபீர் பேசும் போது, "அவர் பிற்போக்கு மனநிலை கொண்டவர் என்ற விமர்சனம் வெளியில் வைக்கப்படுகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது அவரது மகள் பர்தா போட்டு இருப்பதை குறிப்பிட்டு சொல்கிறார்கள். 

அவருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அந்த இரண்டு மகள்களில் ஒரு மகள் மிகவும் மாடலாக இருப்பவர். அவரை ரஹ்மான் எதையுமே சொல்லவில்லை. 

அவருக்கு என்ன விருப்பமோ அப்படி இரு, என்ற பாதையில் விட்டு விட்டார். இரண்டாவது மகள் எங்கு சென்றாலும் பர்தா போட்டே செல்வார்.

அதை தான் விருப்பப்பட்டு போட்டு இருப்பதாகவும், தனக்கு எந்த விதமான வற்புறுத்தலும் இல்லை என்பதை பல மேடைகளில், பல நிகழ்ச்சிகளில் அவர் சொல்லி இருக்கிறார். 

இது வேண்டுமென்று ரஹ் மானை குறை சொல்வதற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டு. காரணம் என்னவென்றால்,  ரஹ் மானை நீங்கள் வேறு எந்த வழியிலும் குற்றவாளி கூண்டில் ஏற்றி விட முடியாது. அவர் எல்லா விதத்திலும் மிகச் சரியாக இருப்பவர்." என்று பேசினார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்