Raj Kiran: தந்தை பேச்சை மீறி நடந்த திருமணம்..இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்த ராஜ் கிரண் மகள் திருமண வாழ்க்கை!
ராஜ் கிரண் மகள் திருமண வாழ்க்கை இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்து உள்ளது.

தமிழ் சினிமாவில் முத்த நடிகரக வலம் வருபவர் ராஜ் கிரண். இவரின் வளர்ப்பு மகள் ஜீனித். தந்தை போல் படங்களில் நடிப்பது இல்லாமல் சீரியலில் நடிக்க விரும்பினார். சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்து உள்ளார்.
அப்போது, அதில் நடித்த சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவரை காதலித்து வந்தார். இந்த சீரியலை இயக்குநர் திருமுருகன் இயக்கி இருந்தார்.
நடிகரின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால், இனிமேல் பிரியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக ராஜ் கிரண் கடந்த ஆண்டு பதிவு வெளியீட்டு இருந்தார்.
இதை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் தெளிவுபடுத்தும் விதமாக, நடிகர் திப்பு சுல்தான் அக்கா நயினார் முகமது என்ற ஒரே ஒரு மகன் தனக்கு இருப்பதாகக் கூறி ஒரு பேஸ்புக் பதிவைக் வெளியீட்டு இருந்தார். தனது மகள் காதலனுடன் ஓடி விட்டதாக வெளியான செய்திக்கு பதிலளித்த ராஜ்கிரண் இவ்வாறு கூறியுள்ளார். எனவே, தனக்கு மகள் இல்லை என்று கூறி வந்தார்.
எனக்கு பிரியா என்ற வளர்ப்பு மகள் இருந்த நிலையில் அவர் முனிஷ் ராஜாவுடன் ஆந்திராவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தப்பிச் சென்றுவிட்டார். அவர் திரும்பி வரவில்லை. அவர் திருமணம் செய்யும் நடிகரைப் பற்றி மோசமான விஷயங்களை மட்டுமே கேட்டேன். அதை கேட்காமல் என் மகள் திருமணம் செய்து கொண்டார். அதனால் எனக்கும் அவருக்கும் எந்த சமந்தமும் இல்லை ” என்றார். இந்த விஷயம் பெரும் விவாதமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் திருமணமான ஒரு ஆண்டில் தனது காதல் கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் வீடியோ பதிவில், “ எல்லோருக்கும் வணக்கம் நான் பிரியா. ராஜ் கிரணின் வளர்ப்பு மகள். நான் 2022 ஆம் ஆண்டு நடிகர் முனிஷ் ராஜாவை திருமணம் செய்தேன். அது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அந்த கல்யாணத்துக்கு பிறகு இப்போது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். நாங்கள் பிரிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. இது சட்ட பூர்வமான திருமணம் கிடையாது.
இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன். நான் இவ்வளவு செய்த போதும் கூட, எனக்கு ஒரு பிரச்னை என அப்பாவிற்கு தெரிய வந்த போது என் தந்தை வந்து உதவினார். இது சத்தியமான உண்மை. இது நான் எதிர்பாராத கருணை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நான் அப்படி செய்து இருக்க கூடாது ” என்றார். இதை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே அவர் சரியில்லை என கண்டித்தார். ஆனால் நீங்கள் தான் தந்தை பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டீர்கள். இனிமேல் தந்தை பேச்சை, கேட்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்