தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Raj Kiran Daughter Jeenath Priya Apologizes For Munish Raja Marriage Issue Kollywood Tamil Movie News

RajKiran: ‘ நாங்க பிரிஞ்சிட்டோம்…அப்பா என்ன மன்னிச்சிருங்க.. உங்க கருணை..’ - வீடியோவில் கதறிய ராஜ்கிரண் மகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 01, 2024 02:54 PM IST

எங்கள் கல்யாணம் சட்டப்பூர்வமான கல்யாணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு, என்னுடைய வளர்ப்பு அப்பாவை நான் மிகவும் காயப்படுத்தி விட்டேன்.

ராஜ்கிரண் வளர்ப்பு மகள்!
ராஜ்கிரண் வளர்ப்பு மகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களது திருமணத்திற்கு ராஜ்கிரண் எதிர்ப்பு தெரிவித்ததோடு பிரியா தன்னுடைய மகள் இல்லை, அவர் தன்னுடைய வளர்ப்பு மகள் என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து விளக்கம் கொடுத்த முனீஸ்ராஜா, “பிரியாவின் அம்மாவான பத்மஜாவின் முன்னாள் கணவர் இளங்கோவனுக்கு பிறந்தவர்தான் பிரியா. 

இளங்கோவனோடு கிட்டத்தட்ட 18 வருடங்கள் வாழ்ந்த பத்மஜா அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ராஜ்கிரண் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார். அப்படி வரும் போது, பத்மஜா பிரியாவையும் அழைத்து சென்று இருக்கிறார்.” என்றார்.

மேலும், அப்போது இருவரும் நிறைய நகைகளை அணிந்து  இருந்தனர். அதை பிரியா திருப்பி கேட்டதற்காக பத்மஜா தங்கள் மீது புகார் அளித்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.  இந்த விவகாரம் இப்படியே சென்று கொண்டிருக்கும் நிலையில், பிரியா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த வீடியோவில், “ நான் 2022ம் ஆண்டு முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அந்த கல்யாணத்திற்கு பிறகு, நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில மாதங்கள் ஆகி விட்டன.

எங்கள் கல்யாணம் சட்டப்பூர்வமான கல்யாணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு, என்னுடைய வளர்ப்பு அப்பாவை நான் மிகவும் காயப்படுத்தி விட்டேன். மூன்ஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் எனக்கு சில பிரச்சினைகள் வர ஆரம்பித்தன.  அந்த நேரங்களில் கூட என்னுடைய வளர்ப்பு அப்பா என்னை கைவிட வில்லை. இது நான் எதிர்பார்க்காத கருணை. நான் எத்தனை முறை மன்னிப்புக்கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா” என்று பேசி இருக்கிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.