Rahul Tiky: 'செத்துப்போன என் பையன் மேல சத்தியமா சொல்றேன் அவன் சாவுக்கு காரணம் மருமகள் தான்..' ராகுல் டிக்கி அம்மா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rahul Tiky: 'செத்துப்போன என் பையன் மேல சத்தியமா சொல்றேன் அவன் சாவுக்கு காரணம் மருமகள் தான்..' ராகுல் டிக்கி அம்மா

Rahul Tiky: 'செத்துப்போன என் பையன் மேல சத்தியமா சொல்றேன் அவன் சாவுக்கு காரணம் மருமகள் தான்..' ராகுல் டிக்கி அம்மா

Malavica Natarajan HT Tamil
Jan 19, 2025 02:52 PM IST

Rahul Tiky: என் மகன் ராகுலின் மரணத்திற்கு என் மருமகள் தான் காரணம் என ராகுல் டிக்கியின் அம்மா குற்றம்சாட்டி உள்ளார்.

Rahul Tiky: 'செத்துப்போன என் பையன் மேல சத்தியமா சொல்றேன் அவன் சாவுக்கு காரணம் மருமகள் தான்..' ராகுல் டிக்கி அம்மா
Rahul Tiky: 'செத்துப்போன என் பையன் மேல சத்தியமா சொல்றேன் அவன் சாவுக்கு காரணம் மருமகள் தான்..' ராகுல் டிக்கி அம்மா

ராகுல் டிக்கி மரணம்

இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல, யூடியூப், பேஸ்புக் போன்ற அனைத்து சமூக ஊடகங்களிலும் இவரது வீடியோக்கள் எல்லாம் பயங்கர வைரல். இவர் சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு செய்தியை அறிந்த அவரது பின்தொடர்பாளர்கள் பலரும் சோகமடைந்தனர். அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ராகுலின் 2ம் மனைவி

இந்நிலையில், உயிரிழந்த ராகுல் டிக்கியின் 2ம் மனைவி தேவிகா செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோவில், ஈரோட்டைச் சேர்ந்த அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ராகுலுக்கு அறிமுகமாகி, பின் நெருங்கிய நண்பர்களாக மாறிய இவர்கள் குடும்ப நண்பர்களாகி திருமணமும் செய்து கொண்டதாக கூறினார்.

ராகுலுக்கு முதலில் ஒரு திருமணம் ஆகி இருந்தது எனக்குத் தெரியாது. அந்தப் பெண்ணுடன் 6 மாதம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் இதெல்லாம் கல்யாணத்திற்கு பின் தான் தெரியும். ராகுலின் அம்மா அவரை குடிக்க வைத்து மதுவுக்கு பழக்கமாக்கியது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என ராகுலின் இரண்டாம் மனைவி தேவிகா அவரது மாமியார் மீது குற்றம் சாட்டினார்.

மறுப்பு தெரிவித்த ராகுல் அம்மா

நான் என் பையன தங்கம் மாதிரி வளத்தேன். அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. அவன் ஆசபட்டவள தான் கல்யாணம் பண்ணிட்டான். அந்த பொன்னு அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது எல்லாமே தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிட்டா. அந்த பொன்னையும் என் சொந்த பிள்ளை மாதிரி தான் பாத்துகிட்டேன்.

ஆனா, அந்த பொன்னு மாமியார் டார்ச்சர், மாமனார் எனக்கு சப்போர்ட் பண்ணுவாருன்னு சொல்லிருக்கு. என் வீட்டுக்காரரே என் கூட இல்ல. இப்போ தான் என் பையன் கல்யாணத்துக்காகவும், அந்த பொன்னுக்காகவும் வீட்டுக்கு வராரு.

மருமகள் தான் சாவுக்கு காரணம்

செத்துப் போன பையன் மேல சத்தியமா சொல்றேன். என் மருமகள் தான் என் மகன் சாவுக்கு காரணம். இனிமேல் என் பையன் வரப்போறது இல்ல. இது எனக்கான பெரிய இழப்பு தான். அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன வேணும்ன்னாலும் பிரச்சனை இருக்கட்டும். அதெல்லாம் பேசி தீத்துக்கலாம்ன்னு தான் சொன்னேன். ஆனா அவ இனிமேல் இவனோட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்லிட்டா.

என் பொருள் எல்லாம் வேணும்

அவங்கள நான் வீட்ட விட்டு தொறத்தல. அவங்களே தான் வீடு பாத்து பால் காய்ச்சி போனாங்க. என் பையனுக்கு நான் ஆச ஆசயா வாங்குன மோதிரம், போட்டோ, ஏசில இருந்து அவன் வாங்குன அவார்ட்டு வரைக்கும் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்க. அதெல்லாம் எனக்கு வந்து சேரணும்.

என் பையனும் அந்த பொன்னும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தாங்க. அப்புறம் என் பையன் சைடுல இருந்து வருமானம் குறைஞ்சது. அதுனால அவங்களுக்கு நான் கடன் வாங்கியும், நகைய வச்சும் காசு வாங்கிக் கொடுத்தேன். அதெல்லாம் எனக்கு திரும்ப வேணும்.

அந்தப் பொன்னு வேற கல்யாணம் பண்ணிப்பா

இப்போ என் பையன் போயிட்டா அவ இன்னொரு கல்யாணம் பண்ணிப்பா. ஆனா எனக்கு என் பையன் திரும்ப கிடைப்பானா?. அந்தப் பொன்னு அவங்க அம்மா பேச்ச கேட்டுட்டு தான் என் பையன விட்டு போனா. அவ போட்ட சண்டைய இந்த தெருவே பாத்துச்சு. அந்த பொன்னு எங்க பேச்ச எல்லாம் கேக்காம வீட்ட விட்டு போயிடுச்சு. இத கேள்விப்பட்டு தான், ராகுல் அவள வீட்டுக்கு கூட்டிட்டு வர போனான். அப்போ தான் அவன் பைக்ல வேகமா போய் அடிபட்டு இறந்துட்டான்.

என் பையன் எல்லா சாமயும் கும்பிடுவான்

என் பையன் குடிச்சிட்டு சுத்தி இருந்தா இவ்ளோ பிரபலம் ஆகிருப்பானா. அவன் எல்லா சாமியும் கும்பிடுறவன். நான் முஸ்லீம். என் புருஷன் இந்துவா இருந்து முஸ்லீமா மாறினவரு. என் பையன் அந்தப் பொன்ன இந்து முறைப்படி தான் கல்யானம் பண்ணிட்டான். அவன அவங்க முறைப்படி எரிக்க சொன்னாங்க. அத நான் செய்யல. அதுக்காக இதெல்லாம் பேசுறாங்க என்றார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.