Rahu Ketu Transit: கொஞ்சம் பொறுத்தா .. கோடி கொட்டும்.. பெண்கள் விஷயத்தில் கவனம் கும்பராசிக்கான ராகு, கேது பெயர்ச்சி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்த ராகுகேது பெயர்ச்சி பலன்களானது, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 20 வரையிலான காலக்கட்டத்திற்கு உரியது!
உங்கள் லக்னாதிபதியும், ராசி அதிபதியான சனி பகவான் வக்ரம் பெற்று போயிருக்கிறார். ஆகையால் நீங்கள் எதிர்பார்த்து செய்வது, மாறுதலாக நடக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த நேரத்தில் குதூகலம் கூடி வந்தாலும், மனதைப் போட்டு மிகவும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எதற்காக இந்த எச்சரிக்கை என்றால், 7 இடத்து அதிபதியான சூரியன் எட்டாம் இடத்தில் மறைகிறார். இது பெரிய மனிதர்கள் உங்களிடம் பங்குதாரராக வருவதற்கான வாய்ப்பையும் உருவாக்கிக்கொடுக்கும்.
சூரியனோடு செவ்வாயும் சேர்ந்து இருக்கிறார். இவன் எட்டாம் இடத்தில் மறைவது என்பது சுமாரானா அமைப்பாக இருந்தாலும், மற்றவர்களிடன் துணையோடு நீங்கள் காரியங்களில் இறங்கினீர்கள் என்றால், குதூகலம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு சரியான பங்கை கொடுத்து விட வேண்டும். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.
7ம் இடத்தில் புதன் உள்ள போது, அதுவும் ராசி லக்னத்தை பார்க்கிற போது, அதிஷ்டம் கண்டிப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் வரக்கூடிய பங்குகள் கிடைக்கும்.
6ம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறான். அவன் 4 இடத்து அதிபதியாகவும் வருகிறான். அவன் 6ம் இடத்தில் மறைகிற போது, உங்களை அறியாமல் நீங்கள் சில செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக எதிர்பாலினர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
2,11 இடங்களுக்கு உரிய குரு பகவான் 3ம் இடத்தில் இருக்கிறார். அது அவ்வளவு நல்லதில்லை என்றாலும் கூட, உடன் ராகு இணைந்திருப்பதால் தன ரீதியாக, லாப ரீதியாக முயற்சிகள் செய்யலாம். 9 ம் இடத்தில் கேது இருப்பதால் குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் நலம் விரும்பிகளின் ஆலோசனைகளை பெறுவது நல்லது.
நன்றி: அருட் குழந்தை ஆறு கணேசன்
டாபிக்ஸ்