என்னா மனுசன்! சூப்பர் சிங்கரில் நடந்த அதிசயம்! கிராமத்தின் தாகம் தீர்த்த லாரன்ஸ்!
நடன இயக்குனரும், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அவரே திரையுலகில் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார்.
சினிமா பிரபலங்கள் தான் இன்றைய இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தொழிலில் உள்ளவர்கள். இதில் தான் நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பும், ஆதரவும் கிடைக்கிறது. ரசிகர்கள் எனும் இந்த பொதுமக்கள் இல்லையென்றால் எந்த நடிகராலும் சாதிக்க முடியாது. ஆனால் மக்களால் பெரும் ஆதரவு பெற்ற நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களுக்கு கிடைத்த பொதுமக்களின் வரவேற்பை அந்த பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கின்றனர்.
முன்னூதரனமாக லாரன்ஸ்
அந்த வகையில் பல கோடிகளை சம்பாதித்த பெரும் நடிகர்கள் கூட எளிய மக்களுக்கு உதவி செய்வது என்பது மிகவும் அரிதாக அரிதான ஒன்றாகும். ஆனால் இந்த வரிசையில் நடன இயக்குனரும், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அவரே திரையுலகில் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறப்பான காரியத்தை செய்து அவரது இயல்பு தன்மையை நிரூபித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட இடங்களில் இருந்து பல குட்டீஸ்களும் வந்து அற்புதமாக பாடி ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து வருகிறனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அரசு பள்ளியின் இருந்து வந்த குழந்தை குக்கிராமங்களில் இருந்து வந்த குழந்தை என பலதரப்பட்ட குழந்தைகளும் வந்து சிறப்பாக பாடி அசத்தி வருகின்றனர்.
மேலும் சிறுவயதிலேயே பல கஷ்டங்களை அனுபவித்த இந்த சுட்டிக் குழந்தைகள் விஜய் டிவியில் வந்து பாடுவது அவர்களது வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்பது உண்மையே. இந்த வரிசையில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டம் குறுக்குழாய்ப்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறான்.
விஷ்ணுவின் கிராமம்
விஷ்ணுவின் பாடலுக்கு அத்தனை நடுவர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணுவின் கிராமத்தில் குடி தண்ணீர்க்காக பல மக்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்வது குறித்து ஒரு வீடியோ இந்த நிகழ்ச்சியில் கலந்து சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து அறிந்த நடிகரும் இயக்குனர் ஆன ராகவா லாரன்ஸ் திடீரென அந்த கிராமத்திற்கு சென்று அந்த கிராமத்திற்கு தேவையான குடிதண்ணீரை ஆழ்துளை கிணறு மூலம் ஏற்படுத்தி உள்ளார். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திடீரென அவர்கள்து கிராமத்தில் நடப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் உறைந்த அந்த மக்கள் நிறைவுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்தான ப்ரோமோவை தற்போது விஜய் டிவியின் youtube தளத்தில் வெளியாகியுள்ளது இதனை அடுத்து ராகவா லாரன்ஸ் அந்த சிறுவனுக்கும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது பல தரப்பு நடிகர்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக பார்க்கப்படுகிற
டாபிக்ஸ்