Raghava Lawrence: விஜயகாந்த் ஆத்மா சாந்திடையனும்..! சண்முக பாண்டியனுக்காக களமிறங்கிய லாரன்ஸ் - விடியோ பகிர்வு
மறைந்த விஜயகாந்த் ஆத்மா சந்தியடைனும். எத்தனையோ ஹீரோக்களை வளர்த்துவிட்ட அவரது மகன் சண்முகபாண்டியன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அவரை வளர்த்து விட தயாராக இருக்கிறேன். டபுளி ஹீரோ சப்ஜெக்ட் இருப்பவர்கள் அனுகலாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மூத்த மகன் பிரபாகரன் அரசியிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சகாப்தம், தமிழன் என்று சொல், மதுரை வீரன் உள்பட படங்களிில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்தபோதிலும் பெரிய ஹிட்டாக அமையவில்லை.
இதையடுத்து மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்க தயார் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ள விடியோவில் கூறியிருப்பதாவது, "விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அவரது சமாதிக்கு நான் எனது தாயாருடன் சென்றிருந்தேன். அங்கிருந்து விஜயகாந்து வீட்டுக்கு சென்றோம். அவரது வீட்டில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது சகோதரர் சுதீப், விஜயகாந்த் மகன்கள் இருந்தார்கள்.
அப்போது அவர்களுடன் இருந்த பிரேமலதாவின் சகோதரியை என்னிடம் அறிமுகம் செய்தார்கள். அவர், சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்து வருகிறார். நீங்கதான் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என சொன்னார்.
அந்த வார்த்தை கேட்கும்போது ஒரு மாதிரியான உணர்வு ஏற்பட்டது. விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு நல்லது செய்துள்ளார். தர்ம காரியங்கள் செய்திருக்கிறார். அவரது பசங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என இரண்டு நாள்கள் வரை மனதில் தோன்றியது.
விஜயகாந்த் நிறைய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். மற்றவர்களை வளர்த்துவிடுவதில் சந்தோஷமிக்கவராக இருப்பார்.
நானும் அவருடன் கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியுள்ளேன். மூக்குத்தி முத்தழகு பாடலை நடனம் அமைத்தேன். அவர் சிறப்பாக நடனமாடியிருப்பதுடன், என்னை நன்கு ஊக்கப்படுத்தவும் செய்தார்.
எனவே நான் விஜயகாந்தின் மகனுக்கு எதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. எனவே சண்முக பாண்டியன் படத்தின் பப்ளிசிட்டிக்கு என்ன தேவைப்படுதோ அதை செய்ய தயாராக உள்ளேன்.
படக்குழு ஒப்புக்கொண்டால் சண்முக பாண்டியின் படத்தில் பாடல், பைட், சீன் என கெஸ்ட் ரோலில் நடிக்க தயார். அவர்கள் நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்ய தயார்.
எத்தனையோ ஹீரோக்களை வளர்த்தவர் விஜயகாந்த். அவரது மகன் வளர்வதை பார்க்க வேண்டும். அதுதான் நாம் விஜயகாந்துகக்கு செய்யும் தர்மமாகவும், அவரது ஆத்மா சாந்தியடையவும் வைக்கும் என நம்புகிறேன்.
டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் நான், சண்முக பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன். விஜயகாந்தின் இன்னொரு மகன் அரசியலில் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்"
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்