Raghava lawrence: ‘படிப்ப மட்டும் விட்றாத சிதம்பரம்’ - லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்! - வைரல் வீடியோ!
சிவசக்தி தற்போது கணிதத்தில் B.Sc முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். காவல் உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நோக்கி அவர் உழைத்து வருகிறார். நிறைய பேருக்கு உதவவும் அவர் விரும்புகிறார். கல்வி சக்தி வாய்ந்த ஆயுதம்.

ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவசக்திக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது தாய் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவரது தந்தை குடும்பத்தை விட்டு சென்றதால், சிவசக்தியையும் அவர் சகோதரியையும் தாயே கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் இருவரும் என் வீட்டில் வளர்ந்தார்கள்.
சிவசக்தி தற்போது கணிதத்தில் B.Sc முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். காவல் உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நோக்கி அவர் உழைத்து வருகிறார். நிறைய பேருக்கு உதவவும் அவர் விரும்புகிறார். கல்வி சக்தி வாய்ந்த ஆயுதம்.
வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது.” என்று பேசி இருக்கிறார். அத்துடன் அவர், சிவசக்தியிடம், தான் உனக்கு செய்த உதவியை போல பிறருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கூறி, இன்னொரு சிறுவனையும் அவர் கையில் எடுத்துக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்