Raghava lawrence: நினைவிடத்தில் அஞ்சலி.. நெஞ்சில் தைத்த வார்த்தை விஜயகாந்தின் மகனுக்காக லாரன்ஸ் கொடுத்த உறுதி!
அந்த ஒரு வார்த்தை என்னை என்னமோ செய்துவிட்டது, காரணம் என்னவென்றால் விஜயகாந்த் சார் திரைக்கலைஞர்கள் மேலே வர என்னவெல்லாமோ செய்திருக்கிறார். எத்தனையோ கதாநாயகன்கள் திரையில் ஜொலிக்க உதவி செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழகமே வந்து அஞ்சலி செலுத்தியது.
அவருக்கு அஞ்சலி செலுத்த வராத பிரபலங்கள் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் அவரது நினைவிடத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், அது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “நேற்று முன்தினம் நானும் என்னுடைய அம்மாவும் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்றிருந்தோம். தொடர்ந்து அவரது வீட்டிற்கும் சென்றோம்.
அங்கு அவரது மனைவியான பிரேமலதா, அவரது சகோதரி, சகோதரர் சுதீப் சார் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் உள்ளிட்டோர் இருந்தார்கள். அப்போது அங்கு விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவின் சகோதரி, சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தான் அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
அந்த ஒரு வார்த்தை என்னை என்னமோ செய்துவிட்டது, காரணம் என்னவென்றால் விஜயகாந்த் சார் திரைக்கலைஞர்கள் மேலே வர என்னவெல்லாமோ செய்திருக்கிறார். எத்தனையோ கதாநாயகன்கள் திரையில் ஜொலிக்க உதவி செய்திருக்கிறார்.
அப்படி இருக்கும் போது, நாம் எனக்கு அவரின் மகன்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணம் என்னை உருத்திக்கொண்டே இருந்தது.
நானும் ‘கண்ணுபட போகுதய்யா’ திரைப்படத்தில் இடம் பெற்ற மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு அவருக்கு நடனம் வடிவமைத்தேன். என்னையும் அவர் நிறைய பாராட்டி இருக்கிறார்.
அவருடைய மகனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
சமூக பாண்டியனின் திரைப்படம் வெளியாகும் பொழுது அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும். அந்தப் படத்திற்கு தேவையான பப்ளிசிட்டியை, நானே முழுக்க இறங்கி செய்யலாம் என்று இருக்கிறேன். அதேபோல படக்குழு சம்மதித்தால், அந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலோ, காட்சியிலோ, பாடலிலோ அவருடன் சேர்த்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதேபோல இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் இருந்தால் கூட சொல்லுங்கள். அதில் ஒரு ஹீரோவாக சண்முக பாண்டியனும் நடிக்கும் போது இன்னொரு ஹீரோவாக நான் நடிக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.
டாபிக்ஸ்