தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raghava Lawrence: காஞ்சனா 4 - பாகத்தில் சீதா ராமம் மிர்ணாள் தாகூரா… யார் சொன்னா? - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

Raghava Lawrence: காஞ்சனா 4 - பாகத்தில் சீதா ராமம் மிர்ணாள் தாகூரா… யார் சொன்னா? - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 09, 2024 04:30 PM IST

Raghava Lawrence: சமீபத்தில், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்தின் மூலம் மிருணாள் தாகூர் கோலிவுட்டில் அறிமுக இருப்பதாக தகவல் வெளியானது. - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

Raghava Lawrence: காஞ்சனா 4 - பாகத்தில் சீதா ராமம் மிர்ணாள் தாகூரா… யார் சொன்னா? - ராகவா லாரன்ஸ் விளக்கம்!
Raghava Lawrence: காஞ்சனா 4 - பாகத்தில் சீதா ராமம் மிர்ணாள் தாகூரா… யார் சொன்னா? - ராகவா லாரன்ஸ் விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

ராகவா லாரன்ஸ் மறுப்பு

இந்த நிலையில் இந்தப்படத்தில், சீதாராமம்,  ஃபேமிலி ஸ்டார் படங்களில் நடித்த மிர்ணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை ராகவா லாரன்ஸ் மறுத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்தப்பதிவில், “ நண்பர்கள் மற்றும் ரசிகர்களே... காஞ்சனா 4ம் பாகம் தொடர்பாக சோசியல் மீடியாவில் உலாவிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகளே. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராகவா லாரன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியாகும்..” என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

கடந்த காலத்தில், தி கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற இந்தி ஆந்தாலஜி திரைப்படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய ஒரு படத்தில் மிருணாள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்ட மிர்ணாள்

மிருணாள் தாகூர் நடிப்பில் கடைசியாக வெளியான ஃபேமிலி ஸ்டார் தோல்வியை அடைந்தது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த இந்தப்படம் 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஆனால், இந்தப்படம் 20 கோடி மட்டுமே வசூல் செய்தது. இதற்கு முன்னதாக இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஹாய் நான்னா, சீதா ராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியைப் பெற்றன. ஆனாலும், ஃபேமிலி ஸ்டாரின் தோல்வியால் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி கைமீறி சென்றது. 

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் மாற்றம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கிய லாரன்ஸ், பாமர மக்களுக்கு அதன் மூலம் உதவி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். 

விஜயகாந்த் மகனுக்கு உதவி 

முன்னதாக, விஜயகாந்தின் இறப்பை தொடர்ந்து அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய ராகவா லாரன்ஸ், “நானும் என்னுடைய அம்மாவும் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்றிருந்தோம். தொடர்ந்து அவரது வீட்டிற்கும் சென்றோம். அங்கு அவரது மனைவியான பிரேமலதா, அவரது சகோதரி, சகோதரர் சுதீப் சார் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் உள்ளிட்டோர் இருந்தார்கள். 

அப்போது அங்கு விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவின் சகோதரி, சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தான் அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தை என்னை என்னமோ செய்துவிட்டது, காரணம் என்னவென்றால் விஜயகாந்த் சார் திரைக்கலைஞர்கள் மேலே வர என்னவெல்லாமோ செய்திருக்கிறார். எத்தனையோ கதாநாயகன்கள் திரையில் ஜொலிக்க உதவி செய்திருக்கிறார்.

அப்படி இருக்கும் போது, நாம் எனக்கு அவரின் மகன்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணம் என்னை உருத்திக்கொண்டே இருந்தது. நானும் ‘கண்ணுபட போகுதய்யா’ திரைப்படத்தில் இடம் பெற்ற மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு அவருக்கு நடனம் வடிவமைத்தேன். என்னையும் அவர் நிறைய பாராட்டி இருக்கிறார். அவருடைய மகனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.” என்று பேசினார். அதனை தொடர்ந்து, சண்முக பாண்டியனின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிப்பதாக அறிவித்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்