Radhika And Virat Kohli: லண்டன் டூ சென்னை பிளைட்..கிரிக்கெட் வீரர் கோலியுடன் செஃல்பி! ஜாலி தருணத்தை பகிர்ந்த ராதிகா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika And Virat Kohli: லண்டன் டூ சென்னை பிளைட்..கிரிக்கெட் வீரர் கோலியுடன் செஃல்பி! ஜாலி தருணத்தை பகிர்ந்த ராதிகா

Radhika And Virat Kohli: லண்டன் டூ சென்னை பிளைட்..கிரிக்கெட் வீரர் கோலியுடன் செஃல்பி! ஜாலி தருணத்தை பகிர்ந்த ராதிகா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Sep 14, 2024 06:55 AM IST

லண்டன் டூ சென்னை வந்த பிளைட்டில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார், அவருடன் இணைந்து செஃல்பி எடுத்துக்கொண்டார். இது பற்றி ராதிகாவின் எக்ஸ் பக்க பதிவு வைரலாகியுள்ளது.

Radhika And Virat Kohli: லண்டன் டூ சென்னை பிளைட்..கிரிக்கெட் வீரர் கோலியுடன் செஃல்பி! ஜாலி தருணத்தை பகிர்ந்த ராதிகா
Radhika And Virat Kohli: லண்டன் டூ சென்னை பிளைட்..கிரிக்கெட் வீரர் கோலியுடன் செஃல்பி! ஜாலி தருணத்தை பகிர்ந்த ராதிகா

தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். தற்போது ஹீரோக்களின் அம்மா கதாபாத்திரங்களில் சினிமாவில் தோன்றி வருகிறார். இதையடுத்து விடுமுறை கொண்டாட லண்டன் சென்றிருந்த ராதிகா அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

ராதிகா பயணித்தை பிளைட்டில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலியும் பயணித்துள்ளார்.

கோலியுடன் செஃல்பி

இதையடுத்து கோலியுடன் செஃல்பி எடுத்து கொண்ட ராதிகா, அவருடன் பயணித்தது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகை ராதிகா, " லட்சக்கணக்கானோரால் விரும்பப்படும் ஐகான் ஆக இருக்கும் கோலியை, லண்டனிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். இதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இங்கு தான் விளையாட வருகிறார். அவர் வாழ்வில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் ரியாக்சன்

இந்த பதிவை பார்க்க பலரும் கிங் கோலி என அவரது செல்லப்பெயரை குறிப்பிட்டுள்ளனர். ரசிகர் ஒருவர் ராதிகாவிடம், "நீங்கள் நடித்த சீரியல்களில் எது கோலிக்கு பிடித்திருந்தது" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இன்னொருவர் ஒரு ப்ரேமில் இரு ஐகான்கள் இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். "மிகவும் பிரபலமான நடிகை இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனுக்கு மரியாதை அளித்திருப்பது மகிழ்ச்சி" என மற்றொரு பயனாளர் ரியாக்ட் செய்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கும் வங்கதேசம் அணி 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கோலி சென்னை வந்துள்ளார். அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, மகள் வாமிகா மற்றும் புதிதாக பிறந்திருக்கும் அகே ஆகியோர் லண்டனில் இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக அகே பிறந்தார். அதன் பின்னர் கோலி விளையாட இருக்கும் டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது.

சினிமாவில் பாலியல் தொல்லை குறித்து ராதிகா பேச்சு

சமீபத்தில் சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து நடிகை ராதிகா பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவரது பேச்சுக்கு ஆதரவு குரல்களும், விமர்சனங்களும் எழுந்தன.

தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்து ராதிகா கூறியதாவது, "மலையாளத்தில் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் அமர்ந்து போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பார்த்து சிரிக்கிறார்கள் என்று தமிழ் நபர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். கேரவனில் நடிகைகள் உடை மாற்றுவதை ரகசியமாக கேமரா வைத்து படம் பிடித்து அதை அனைவரும் அமர்ந்து பார்க்கிறார்கள்.

எந்த நடிகை பெயர் சொன்னாலும் அவர்களிடம் அந்த வீடியோ இருக்கிறது என்று சொன்னார். இதை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு தெரிந்த அனைத்து நடிகைகளுக்கும் சொல்லி முன்னெச்சரிக்கை செய்தேன்." என்றார்.

ராதிகா நடிப்பில் கடைசியாக தமிழில் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் பொங்கலையொட்டி வெளியானது. இதைத்தொடர்ந்து, தெலுங்கில் ஆபரேஷன் ராவன் மற்றும் மலையாளத்தில் பவி கேர்டேக்கர் ஆகிய படங்களில் நடித்தார். தாயம்மா குடும்பத்தார் என்ற டிவி ஷோவிலும் அவர் தோன்றுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.