Radha Ravi: பாலியல் தொல்லையா கொடுத்தாரா ராதா ரவி? தவறை வெளியில் சொல்ல வெட்கப்படலாம் - கே.ராஜன் காட்டம்
K.Rajan Vs Radha Ravi: இத்தனை பிரச்சனைகளுக்கு பின்பும் ராதா ரவி அமைதி காப்பதற்கு காரணம் குறித்த கேள்விக்கு ஒரு வேலை குற்றம் நடந்திருக்கலாம். அதை வெளியில் சொல்ல வெட்கப்படலாம். வேற விஷயம் எனக்கு தெரியவில்லை. என் விஷயத்தை நான் சொல்லி விட்டேன். மற்றவர்கள் விஷயம் எல்லாம் எனக்கு தெரியவில்லை என்றார்.
Tamil Dubbing Union Issue: டப்பிங் யூனியன் விவகாரத்தில் நடிகர் ராதாரவி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் டேக்1 (Take 1) யூ டியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
அந்த பேட்டியில் சமீபத்தில் டப்பிங் யூனியன் பிரச்சனையில் ராதாரவி தலைவராக வருவதற்கு முன்னும் பின்னும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் கூட குற்றச்சாட்டு எழுகிறது. இதுகுறித்து நீங்க எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கே.ராஜன், ராதா ரவி நீண்ட காலமாக டப்பிங் யூனியனில் இருக்கிறார். அவரிடத்தில் எல்லோரும் நன்றாகதான் இருந்தார்கள். இந்த குற்றச்சாட்டு எனக்கு தெரியவில்லை. அவர் என் நண்பர் அப்படி ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் அதை நீக்கி விட்டு இந்த முறையாவது அவர் வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தலைவராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று இல்லாமல் வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
அவர் கூட இருந்தவர்களே வெளியே வந்து குற்றச்சாட்டுகள் வைப்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அது அவர்களுக்குள் உள்ள விஷயம். ரெம்ப காலம் ஆகி விட்டது. ராதா ரவியோடு நான் ஒரு 15 வருடம் நெருக்கமாக இருந்தேன். இப்போது 5 வருடமாக அதிகமாக பழகவில்லை. அவர் நடிக்கிறார். நான் என் வேலையை பார்க்கிறேன். அதனால் ரவியுடனும் டப்பிங் யூனியனுடனும் தொடர்பே இல்லாமல் போய் விட்டது. அதனால் இப்போது உள்ள குற்றச்சாட்டு மற்றும் அதன் நடைமுறை குறித்து எனக்கு தெரியாது என்றார்.
அதேபோல் டப்பிங்க யூனியனில் மெம்பர் ஆக வேண்டும என்றால் இரண்டரை லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரை கேட்கிறார்கள். அது முடியவில்லை என்றால் ஒரு சில அட்ஜெஸ்மெண்டில் 50 ஆயிரம் ஒரு லட்சம் வரை குறைப்பதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அறித்த கே.ராஜன், " அது தவறுதான். நான் கூட கேள்விப்பட்டேன். மெம்பர் ஷிப்க்கு என்ன பணம் வேண்டுமோ அதை விட கூடுதலாக வாங்கியதாக நானும் கேள்விப்பட்டேன். அப்படி வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய தவறு.
பாவம் தொழிலாளர்கள். ஏதோ தொழில் கிடைக்கும் குடும்பம் நடக்கும் என்று வருகிறார்கள். அப்படி கேட்டிருந்தால் அது தவறு. இதைவிட ஒன்று சொல்கி றேன். நான் 7500 ரூபாய் கொடுத்து லைப் டைம் பெம்பர் ஆனேன். கமிட்டி மெம்பராக எல்லாம் இருந்தேன். நன்றாக ஒர்க் பண்ணேன். ஆனால் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென என்னை எடுத்து விட்டார்கள். ஏன் என்றே காரணம் சொல்லவில்லை . இன்று வரை கேட்கிறேன். காரணம் சொல்லவில்லை. அவர் என் நண்பர் என்பதால் விட்டு விட்டேன்.
இத்தனை பிரச்சனைகளுக்கு பின்பும் அவர் அமைதி காப்பதற்கு காரணம் குறித்த கேள்விக்கு ஒரு வேலை குற்றம் நடந்திருக்கலாம். அதை வெளியில் சொல்ல வெட்கப்படலாம். வேற விஷயம் எனக்கு தெரியவில்லை.
என் விஷயத்தை நான் சொல்லி விட்டேன் என் விஷயத்திலேயே இப்படி நடந்தது மற்றவர்கள் விஷயம் எல்லாம் எனக்கு தெரியவில்லை என்பது உள்ளிட்ட பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நன்றி: Take 1
டாபிக்ஸ்