Dhanush: ‘அடங்காத அசுரன்.. ராயன் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய தனுஷ்! - புதிய ரிலீஸ் தேதி இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: ‘அடங்காத அசுரன்.. ராயன் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய தனுஷ்! - புதிய ரிலீஸ் தேதி இங்கே!

Dhanush: ‘அடங்காத அசுரன்.. ராயன் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய தனுஷ்! - புதிய ரிலீஸ் தேதி இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 10, 2024 07:05 PM IST

Dhanush: தனுஷ் நடித்து, இயக்கும் ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட்டை தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்து இருக்கிறார்.

Dhanush: ‘அடங்காத அசுரன்.. ராயன் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய தனுஷ்! - புதிய ரிலீஸ் தேதி இங்கே!
Dhanush: ‘அடங்காத அசுரன்.. ராயன் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய தனுஷ்! - புதிய ரிலீஸ் தேதி இங்கே!

 

கவனம் ஈர்த்த பாடல்கள்

அதில் தனுஷ் ஒரு உணவு டிரக்கின் முன், மொட்டையடித்த தலையுடனும் மீசையுடனும் கூர்மையாகப் பார்த்தார். மேலும் அவர் இரத்தம் தோய்ந்த உடையுடன் காணப்பட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

இந்தப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான அசுரன் மற்றும் வாட்டர் பாக்கெட் உள்ளிட்ட பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. முன்னதாக, இந்தப்படம் ஜூன் 13ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, ராயன் திரைப்படம் ஜூலை 26ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்தான அறிவிப்பை தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ படத்திற்கு அவரது சகோதரர் செல்வராகவன் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்துள்ளதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. ஆனால் அதை செல்வராகவன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். 

தம்பியின் கதை 

வதந்திகளுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த செல்வராகவன், இந்தப் படம் முழுக்க முழுக்க தனுஷுடையது என்று கூறினார். அதில் அவர், 'என் தம்பியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' என்றுகூறிய செல்வராகவன், "நண்பர்களே, 'டி 50 ராயன்' படத்துக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்தன. எனக்கும் 'ராயன்' கதைக்கும், திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். 

இது முழுக்க முழுக்க, என் தம்பி தனுஷின் கனவுக் கதை. இப்போது அதை அவர் எழுதி இயக்கி, முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே’’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "உங்கள் அனைவரையும் போலவே நானும் ராயன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வெகுநாட்கள் காத்திருக்க முடியாது. எனது சகோதரர் தனுஷின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ எனப் பதிவிட்டு இருந்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: