Raashi Khanna: ஒடிடியா? சினிமா தியேட்டர்? - ராஷி கண்ணா நச் பதில்
நடிகை ராஷி கன்னா தியேட்டர் தான் தனது முதல் தேர்வு என சமீபத்தில் கூறினார்.
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. அப்படம் ஹிட்டானதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.
ஜெயம் ரவியுடன் அடங்குமறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ஃபார்ஸி, வெப் சீரிஸில் நடித்து இருந்தார். இவர் ஃபார்ஸி படம் மூலம் இந்திய முழுவதும் தான் அறியப்பட்டு இருப்பதால் இனிமேல் தன்னை இந்திய நடிகை என சொல்லாம் என கூறி உள்ளார்.
அவர் கூறுகையில், "இந்த தொடரை நான் ராஜ் மற்றும் டிகே பெயரைக் கேட்ட உடனேயே ஒத்துக்கொண்டேன்.
சினிமாவுக்கும் ஓடிடி தொடர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால் திரையரங்கில் நம்மை நாமே பார்த்து கொள்வது மிகச் சிறந்த அனுபவம். அதனால் எனது முக்கியத் தேர்வாக சினிமா தியேட்டர் தான் இருக்கும். ஓடிடியில் ஒரு அனுபவமும் கிடைக்காது. அதனால் நான் திரையரங்க ரிலீஸ் படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன்" என்றார்.
ராஷி கண்ணா வெப் சீரிஸ்களில் பணியாற்ற சிறந்த வருமானம் ஈட்டுகிறார். ஒவ்வொரு படத்திற்கும் தொடருக்கும் மிக அதிக சம்பளம் கேட்கிறார் என சொல்லப்படுகிறது. இது தவிர சில பெரிய பிராண்டுகளை விளம்பரப்படுத்தியும் சம்பாதிக்கிறார். இந்த விளம்பரத்திற்காக அவர் 40 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சுமார் 55 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துக்கு வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்