‘அப்படி என்ன சௌந்தர்யா உங்களுக்கு வன்மம்.. அருண் எல்லாம் கடவுள் மாதிரி..’ சம்பவம் செய்யும் ராணவ் குடும்பம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அப்படி என்ன சௌந்தர்யா உங்களுக்கு வன்மம்.. அருண் எல்லாம் கடவுள் மாதிரி..’ சம்பவம் செய்யும் ராணவ் குடும்பம்..

‘அப்படி என்ன சௌந்தர்யா உங்களுக்கு வன்மம்.. அருண் எல்லாம் கடவுள் மாதிரி..’ சம்பவம் செய்யும் ராணவ் குடும்பம்..

Malavica Natarajan HT Tamil
Dec 25, 2024 02:56 PM IST

'பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ராணவ் குடும்பம் சௌந்தர்யாவிற்கு ராணவ் மேல் என்ன அப்படி ஒரு வன்மம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

‘அப்படி என்ன சௌந்தர்யா உங்களுக்கு வன்மம்.. அருண் எல்லாம் கடவுள் மாதிரி..’ சம்பவம் செய்யும் ராணவ் குடும்பம்..
‘அப்படி என்ன சௌந்தர்யா உங்களுக்கு வன்மம்.. அருண் எல்லாம் கடவுள் மாதிரி..’ சம்பவம் செய்யும் ராணவ் குடும்பம்..

கை உடைந்த நிலையில் ராணவ்

இதையடுத்து இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ராணவ்வின் குடும்பத்தினர் வந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் விளையாடிய போது ராணவ்வின் கை உடைந்துள்ள நிலையில், தற்போது அவரைப் பார்க்க குடும்பத்தினர் வந்துள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே ராணவ் பிக்பாஸ் வீட்டில் பலரால் தாக்கப்படுவதும், கை உடைந்து இருப்பதையும் பார்த்துவிட்டு அவன் எங்கள் வீட்டிற்கு வந்தால் போதும் என கூறி இருந்தனர்.

பிரபஞ்சம் உதவும்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ராணவ்வின் அப்பா அம்மா மற்றும் சகோதரி ராணவ்வை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் நன்றாக விளையாட வேண்டும். இந்த பிரபஞ்சம் உனக்கு உதவும் என்று அறிவுறுத்தினார். பின், மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து கராத்தே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அருணைப் பற்றி பேசிய ராணவ் அப்பா அருண் எங்களுக்கு கடவுள் மாதிரி எனக் கூறி ராணவ்வை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

அப்படி என்ன வன்மம்

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் யாருடன் முரண்பாடு உள்ளது என பிக்பாஸ் கேட்ட சமயத்தில், ராணவ்வின் சகோதரி சௌந்தர்யாவிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார். ராணவ் கீழே விழுந்த சமயத்தில் அவன் நடிக்கிறான். அவன் நடிக்கிறான்னு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தீங்க. எங்களுக்கு அங்க இருந்து பாக்கும் போது, அவன் அங்க வலியில அழுதுட்டு இருக்கான். நீங்க ஏன் அப்படி திரும்ப திரும்ப சொல்றீங்க. அப்படி என்ன உங்களுக்கு வன்ம் இருக்கு என கேட்டார்.

சில விஷயங்கள மாத்திகணும்

முன்னதாக சௌந்தர்யாவைப் பார்க்க வந்த அவரது குடும்பத்தினர், "இன்னும் நிறைய விஷயங்கள மாத்திக்கணும். நீ நல்லா விளையாடனும். நீ எல்லாம் குடுத்து வச்ச ஆளு. நீ வீட்ல இருக்க மாதிரி இல்ல. 10 விஷயம் சொன்னா 2 விஷயத்த மட்டும் புரிஞ்சிகிட்டு சண்ட போடுற. அது நல்லது இல்ல. நீ இவ்ளோ நாள் கடந்து வந்துருக்க.

யாருக்காவது தலைவலின்னா கூட அவங்கள விசாரிக்கணும். எதாவது வேணுமான்னு கேக்கணும். உன் பிரண்ட்ஸ்னா நீ பின்னாடி போய் பேசக்கூடாது. அவங்க முகத்துக்கு நேரா சொல்லணும்.

அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி யோசி

அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு முன்ன நாம எப்படின்னு பாக்கணும். ஒருத்தவங்க குறை சொல்றாங்கன்னா சும்மா சொல்ல மாட்டாங்க. அத முதல்ல புரிஞ்சிக்க. வீட்ல நல்லா தான் இருந்த. இங்க வந்து கத்துற. உன்கிட்ட கைன்ட்னெஸ் சுத்தமா இல்ல. சேதுபதி சார் எவ்ளோ அழகா டிப்ஸ் குடுக்குறாங்க. அத புரிஞ்சிக்கோ. பிரண்ட்ஸ்ஸ விட்டுக் கொடுக்க சொல்லல. ஆனா, தனியா கேம் விளையாடு.

ஒருத்தவங்க ஒரு விஷயத்த சொல்லிட்டு மறந்துடுவாங்க. ஆனா, நீ அதையே புடிச்சிட்டு பேசிட்டு இருக்காங்க. நல்ல பேர் வாங்கு. உன்கிட்ட யாராவது பேசுனா கொஞ்சம் காதுகுடுத்து கேளு. சாச்சனா கூட போகும் போது உனக்கு அட்வைஸ் பண்ணா. உன்கிட்ட சண்டை போடுற மாதிரி கேரக்கடர் இருக்கு. அதமட்டும் குறைச்சுக்க சொன்னா. அத புரிஞ்சிக்கோ என சௌந்தர்யாவின் அம்மா அப்பா அட்வைஸ் கொடுத்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.