Thalapathy Vijay: ‘புருஷன பாத்துக்கிறதுக்கு ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா..’ - விஜய் - சங்கீதா பிரிவு உண்மையா? - விஜய் மாமா
Thalapathy Vijay: ஒரு குழந்தையின் அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வாரா? அல்லது புருஷனை பார்த்துக் கொள்வாரா? .. புருஷனை பார்த்துக் கொள்வதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்; பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு யார் இருக்கிறார்..? - விஜய் மாமா!மா

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 69 வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் போஸ்டர் 76 வது குடியரசு தினமான நேற்றைய தினம் வெளியானது. இந்தப்படத்தை முடித்த பின்னர், அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து விட்டார். அதற்கான பணிகளையும் மிகவும் மும்மரமாக செய்து வருகிறார்.
விஜய் - சங்கீதா விவாகரத்து
இதற்கிடையே, அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவுக்குமான உறவில் விரிசல் விழுந்து விட்டதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்திகள் உலாவி வந்தன. ஆனால், அந்த செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஜயின் மாமாவும், ஒளிப்பதிவாளருமான ஆர். செல்வகுமார் ஜெம் சினிமா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அதில் அவர் பேசும் போது, ‘என்னை விட ஊர் மக்களுக்குத்தான் விஜயைப்பற்றி நன்றாகத் தெரியும். அவர் எங்கே செல்கிறார், எங்கே நடக்கிறார், எத்தனை மணிக்கு அவரது வீட்டின் கேட் திறக்கப்படுகிறது. எத்தனை மணிக்கு கேட் மூடப்படுகிறது. இவை அனைத்தையும் வீட்டில் இருப்பவர்களை விட, சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமும் தெரிந்துவிடுகிறது.
மக்களை கவர செய்திகள்
பல விஷயங்களை நாங்கள் சோசியல் மீடியாவை பார்த்துதான் ஆராய்ச்சி செய்கிறோம். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள், அவர்களது நேர்காணல்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, எதை எதையோ எழுதி, பேசி அதற்கு அழகாக டைட்டிலும் வைத்து வெளியிடுகிறார்கள்.
விஜய் குடும்பத்தோடுதான் இருக்கிறார்.
விஜய் குடும்பத்தோடுதான் வாழ்ந்து வருகிறார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவரவர்கள், அவரவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயின் மகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வாரா?
அப்படி இருக்கும் பொழுது, ஒரு குழந்தையின் அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வாரா? அல்லது புருஷனை பார்த்துக் கொள்வாரா? .. புருஷனை பார்த்துக் கொள்வதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்; பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு யார் இருக்கிறார்..?
பாதுகாப்பு நிச்சயம் வேண்டும்.
அம்மாதான் அவருக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும்; அதுவும் பெண் குழந்தை வேறு; ஆண் குழந்தைகள் எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வார்கள்; ஆனால் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு பாதுகாப்பு என்பது நிச்சயம் வேண்டும்.
மகளோடு வசித்து வருகிறார்
அவரின் பாதுகாப்புக்காகவும் படிப்புக்காகவும் சங்கீதா மகளோடு வசித்து வருகிறார். ஆனால் இதை சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் ஊதி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அதில் உண்மை எல்லாம் இருக்காது.' என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்