Thalapathy Vijay: ‘15 வருஷத்துக்கு முன்னாடியே பிளான் போட்டாச்சு.. முழு மூளையும் எஸ்.ஏ.சிதான்’ -விஜய் மாமா!
Thalapathy Vijay: ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் விஜயின் பேச்சை எல்லாம் பார்க்கும் பொழுது அரங்கம் அதிர்கிறது. - விஜய் மாமா!

Thalapathy Vijay: ‘15 வருஷத்துக்கு முன்னாடியே பிளான் போட்டாச்சு.. முழு மூளையும் எஸ்.ஏ.சிதான்’ -விஜய் மாமா!
Thalapathy Vijay: விஜயின் அரசியல் வருகை குறித்து அவரது மாமாவும், ஒளிப்பதிவாளருமான ஆர். செல்வகுமார் ஜெம் சினிமாஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் நிச்சயம் வரவேண்டும்
அவர் அதில் பேசும் போது, ‘விஜய் ஒரு ஒன் மேன் ஷோ. அவர் என்ன முடிவு எடுத்தாலும், அந்த முடிவு தான் இன்று முக்கியமானதாக இருக்கிறது.ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் விஜயின் பேச்சை எல்லாம் பார்க்கும் பொழுது அரங்கம் அதிர்கிறது.
ஒரு விதத்தில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்; நம் பிள்ளை இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறான் என்பதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை நாங்கள் முழு மனதாக ஆதரித்துதான் ஆக வேண்டும் அவர் அதிகார கட்டிலில்அமர வேண்டும்.