கஜினி பட வாய்ப்பை நிராகரித்த மாதவன்! ஏன் தெரியுமா?
இன்ஸ்டாவில் லைவ் சாட் செய்த நடிகர் மாதவன், கஜினி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்ததன் பின்னணி காரணத்தை தெரிவித்தார். அத்தோடு அந்த படத்துக்காக சூர்யா பட்ட கஷ்டங்களையும் அவர் விவரித்தார்.
மாதவன் இயக்கி, நடித்திருக்கும் தி ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற சயின்ஸ் பிக்ஷன் டிராமா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாரயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தனது இன்ஸ்டாவில் லைவ் சாட்டில் ஈடுபட்ட நடிகர் மாதவன் கஜினி படத்தை மிஸ் செய்ததன் பின்னணி காரணத்தை கூறினார். அதில், "இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கஜினி படத்தின் கதையை என்னிடம் கூறினார். இரண்டாம் பாதியில் கதையுடன் என்னை இணைத்துக்கொள்ள முடியாமல் போவதாக உணர்ந்ததால் அந்தக் கதையை நிராகரித்து விட்டேன்" என்று கூறினார்.
அத்துடன் கூடுதல் தகவலாக, " கஜினி படத்துக்காக நடிகர் சூர்யா கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை உப்பு சேர்க்காமல் இருந்து வந்தார். படத்தில் சிக்ஸ்பேக்கில் தோன்றிய அவர், அந்த வடிவத்தை பெறுவதற்காக இப்படியொரு கடின உழைப்பை வெளிப்படுத்தினார்" என்றும் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியான கஜினி திரைப்படம் அங்கும் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இந்தப் படம் இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் அதே பெயரில் 2008ஆம் ஆண்டில் ரீமேக் செய்யப்பட்டது. இந்திப் பதிப்பிலும் அசின் கதாநாயகியாக நடித்தார்.
கஜினி படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவுடன், நடிகர் மாதவன் உரையாடியது தொடர்பாக பிரபல சினிமா இணையத்தளம் குறிப்பிட்டிருப்பதாவது: " கஜினி படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என்னிடம் சொன்னார். படத்தின் கதை, குறிப்பாக இரண்டாம் பாதியில் என்னை இணைத்துக்கொள்ளும் விதமாக இல்லாத காரணத்தால் நிராகரித்தேன். பின்னர் அந்தக் கதை உங்களிடம் வந்தது பற்றி அறிந்தேன். படத்தில் உங்களது நடிப்பை பார்த்து மிகவும் சந்தோஷபட்டேன்.
உங்களது நடிப்பு திறமை காக்க காக்க படத்தில் சிறப்பாக இருந்தது. பின்னர் கஜினி சரியான நபருக்குதான் சென்றுள்ளது என்பதை உணரும் விதமாக சிறப்பாக நடித்து நீங்கள் நிருபித்தீர்கள்.
கஜினி படத்தின் வெற்றி மிகப் பெரிய விஷயம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிக்ஸ் பேக் உடல் அமைப்பை பெற நீங்கள் கடினமான முயற்சித்ததை நேரடியாக பார்த்து மிகவும் வியந்துபோனேன்.
சிக்ஸ் பேக்குக்கு தகுந்த உடல்வாகு பெறுவதற்கு நீங்கள் ஒரு வாரம் வரை உப்பு சேர்க்காமல் இருந்தது எனக்கு நினைவு இருக்கிறது. அப்போது, ஒரு கதாபாத்திரத்துக்காக இந்த அளவு உழைப்பை போடுகிறோமா என என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். எனது சினிமா வாழ்க்கையிலும், நான் நடித்த படங்களுக்கும் போதிய அளவு நியாயம் செய்யவில்லை என்பதை இப்போது உணர்கிறேன். உங்களை நான் ஒரு உதாரணமாகவே நான் வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
மாதவனும் - சூர்யாவும் இணைந்து மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகள் ஆக்ஷன் தெறிக்கும் விதமாகவே அமைந்திருப்பது நினைவிருக்கலாம்.
டாபிக்ஸ்